Monday, November 19, 2007

ஜகாத் - ஓர் ஆய்வு - பீ.ஜேயின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன்

பிஸ்மில்லாஹ்

தமிழகத்தில் இஸ்லாம்

தமிழகத்தில் இஸ்லாம் இன்று எந்த நிலையில் இருக்கின்றது என்பதை விளக்குவதும், இதன் மூலம் சில விஷயங்களில் நாம் நம்மை, சீர்திருத்திக்கொள்ள வேண்டும் என்பதும் தான் இந்த தலைப்பை தமிழக முஸ்லீம்களின் முன் வைப்பதன் நோக்கம்.

(1) முதல் நிலை:

தமிழகத்தில் முஸ்லிம்களின் மத்தியில் மார்க்கத்தில் இல்லாத அனாச்சாரங்களும், அவலங்களும் பெருகி கிடந்த நேரம் இது. நிரந்தர நஷ;டத்தை தரக்கூடிய இணைவைப்புகள், பஞ்சமில்லாமல் நடந்து கொண்டிருந்த காலம். இஸ்லாம் என்ற பெயரிலே யார் எதை சொன்னாலும் அதை நம்பி செயல் படுத்தி நஷ;டவாளிகளாக பெரும்பாலான முஸ்லிம்கள் வலம் வந்து கொண்டிருந்த நேரம் இது.

இந்த நிலையில் தான் எகத்துவமும், இஸ்லாம் அதன் தூய வடிவிலும் மக்களின் மத்தியில் எத்திவைக்கின்ற பணி ஆரம்பமாகின்றது. இந்த பிரச்சாரத்திற்கு பல எதிர்ப்புகள் பல வழிகளில் வந்தது. அவைகளை எல்லாம் சகித்துக் கொண்டு, அடி, உதைகளையும் வாங்கி, இரத்தம் சிந்தி உறுதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

அல்லாஹ்வின் அருளால், அதன் விளைவுகளை இன்று கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது. இணைவைப்பில் சிக்கி கிடந்தவர்களும், பித்அத்தில் மூழ்கி இருந்தவர்களும் அதில் இருந்து விடுபட ஆரம்பித்துள்ளனர். ஏகத்துவத்தின் பக்கம் திரள ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் அதிக அளவில் குவிய ஆரம்பித்துள்ளனர். புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

இப்படியான ஒரு எழுச்சியை மக்கள் மத்தியில் கொண்டு வர பல உலமாக்கள் காரணமாயிருந்தனர். அதிலும் குறிப்பாக மதிப்பிற்குறிய மௌலவி பி.ஜே. அவர்களின் பங்கும் செயல்பாடும் மிகவும் அதிகமானது. அல்ஹம்துலில்லாஹ்.

(2) இரண்டாவது நிலை:

தமிழகத்திலே இஸ்லாமிய ஏகத்துவத்தின் அடித்தளம் செம்மையாக அமைக்கப்பட்டு, முஸ்லீம்கள் அதன்பால் குவிய ஆரம்பித்துவிட்டனர். இந்த நேரத்திலேதான் 'வெண்ணெய் திரளும் போது தாழி (பாணை) உடைந்த கதை'யாக சில நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்வுகள் உலக முஸ்லீம்களையும், அறிஞர்களையும், தமிழகத்தின் பக்கம் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்க்க வைத்துள்ளது.

ஏகத்துவம் என்ற கட்டிடத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. இனி கட்டிடத்தை கட்டி பூர்த்தி செய்து அதன் பலனை முழுமையாக அடைவதுதான் பாக்கி என்றிருக்கும் நேரத்தில்தான், அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கின்ற சில நிகழ்வுகள் ஒரு புறம் நடக்க ஆரம்பிக்கின்றது.

அஸ்திவாரம் ஆட்டம் கானுவதின் விளக்கம்

இஸ்லாத்தின் அடிப்படை அஸ்திவாரத் தூண்களில் ஒன்றான ஜகாத் விஷயத்திலும், இன்னும் சில விஷயங்களிலும், இதுவரை யாரும் சொல்லாத, பின்பற்றாத கருத்துக்களை, மதிப்பிற்குரிய மௌலவி பி.ஜே. அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அனைவருக்கும் மாற்றமான ஒரு கருத்தை பி.ஜே. அவர்கள் சொல்கின்றார்கள் என்ற கரணத்தினால் அது தவறு என்று நாம் கூறவில்லை. எந்த ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு அவர் ஒரு கருத்தை சொல்கின்றாறோ அந்த ஆதாரம் தவறானதாக இருக்கின்றது. ஆதாரத்தின் அடிப்படையில்தான் முடிவை எடுக்கிறோம். ஆதாரம் தவறானதாக போய்விட்டால் அதன் அடிப்படையில் எடுத்த முடியும் தவறுதான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் பி.ஜே. அவர்களோ, ஆதாரம் தவறாக போனால் என்ன? நான் சொன்ன கருத்தை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கின்றார். தான் சொன்ன கருத்துக்கு வேறு ஆதாரங்கள் இருக்கின்றதா? என்று தேடி, அப்படி ஏதும் இல்லாத காரணத்தினால் 'இது தான் ஆதராம்' என்று வேறு சில ஆதாரங்களை காட்ட முற்படுகிறார்.

அவர் சொல்லக்கூடிய கருத்துக்கு, அவைகள் ஆதாரமாக இல்லை. அவர் சொல்லிவிட்ட கருத்தை மாற்றிக்கொண்டிருக்க வேண்டியவர், நான் சொன்ன கருத்து சொன்னதுதான், என்பதிலே பிடிவாதமாக இருப்பதுடன் அதற்காக இல்லாத சான்றுகளை எல்லாம் இவைதாம் சான்றுகள் என்கிறார்.

இவை அனைத்தையும் ஆதாரங்களுடனும், நிரூபணங்களோடும் நாம் பார்க்க இருக்கின்றோம் இன்ஷh அல்லாஹ்.

இதே போன்று வேறு சில விஷயங்களிலும், பி.ஜே. அவர்கள் மாறுபட்ட கருத்தை பிரச்சாரம் செய்கின்றார்கள். நாம் இங்கு அப்படிப்பட்ட விஷயங்களில் இரண்டை எடுத்துக் கொண்டுள்ளோம்.

(1) ஜகாத்
(2) குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்

இவைகளை நாம் எடுக்கக் காரணம், ஜகாத் இஸ்லாமிய அடிப்படையிலே ஒரு அம்சம். இதைப் போலவே நபி மொழியின் முக்கியத்துவத்தை நாம் விளக்கவேண்டியதில்லை.

மூன்றாம் நபராக முரண்பட்ட கருத்தை முடிவு செய்தல்

முரண்பட்ட இரண்டு கருத்துகளில் ஒன்று தவறு, ஒன்று சரியானது. முரண்பட்ட இரண்டு கருத்துக்கும், இருதரப்பில் இருந்தும் ஆதாரம் தரப்படுகின்றது.

நாம் இங்கு மூன்றாம் நபராக இருக்கின்றோம். ஏதோ ஒன்றை பின்பற்ற வேண்டும். இருதரப்பிலும் அவரவர்கள் தங்கள் கருத்துக்கான சான்றுகளை ஆய்வு செய்து சமர்ப்பித்து தான் பிரச்சாரம் செய்கின்றார்கள். இப்படி இருதரப்பின் உலமாக்களும் ஆய்வு செய்துள்ளனர்.

நாங்கள் ஆய்வு செய்துவிட்டோம், ஆகையால் நாங்கள் சொல்லும் கருத்தை அப்படியே பின்பற்றுங்கள், என்று யாரும் கூறுவதில்லை. நாங்கள் ஆய்வு செய்து எங்களின் கருத்துக்கு இவைகளை சான்றுகளாக ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆகவே நாங்கள் சொல்லும் கருத்துக்கு இவைகள் தாம் சான்றுகள் என்று சான்றுகளை நம்முன் வைத்துதான் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

நாம் முன்பே குறிப்பிட்டது போல், ஏதோ ஒன்றை பின்பற்ற வேண்டும். உதாரணமாக நான் ஜகாத் கொடுக்கக்கூடியவனாக இருக்கின்றேன். ஜகாத் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதிலே கருத்து வேறுபாடு இருக்கின்ற காரணத்தினால், ஜகாத் கொடுப்பதையே நிறுத்திவிட முடியுமா? அப்படி நிறுத்தினால் அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாவோம்.

ஜகாத் கொடுக்க வேண்டும் அதுவும் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் சொன்ன முறையில் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஜகாத் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. இங்கு ஜகாத் கொடுத்தும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

ஆகவே ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு முக்கியமான கடமை, இந்த காலகட்டத்திலே இருக்கிறது. இருமாறுபட்ட கருத்துகளுக்கும் வைக்கக்கூடிய சான்றுகளை பார்த்து எது சரி? என்று முடிவெடுப்பது அவசியமாக இருக்கிறது. இதற்கு ஆலிம் பட்டம் வாங்கி இருக்க வேண்டாம், டாக்டரேட் பட்டம் வாங்கி இருக்க வேண்டாம். அரபி மொழி கூட தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமது தாய் மொழியிலும், நமக்கு ஓரளவு பரிச்சயமான ஆங்கில மொழியிலும், குர்ஆனும், நபி மொழியும் வெளிவந்திருக்கின்றன.

வேளை பளுவின் காரணமாகவும், இன்னும் பிற சூழ்நிலையின் காரணமாகவும், எல்லோரும் இவைகளை பார்க்க இயலாது என்பது நடைமுறையில் உண்மை. ஆனால் ஒரு விஷயம் தவறு என்று ஆதாரங்களின் அடிப்படையில் சுட்டிக் காட்டப்படும் போதும், நான் அதை பார்க்க மாட்டேன் என்று இருப்பது தவறு. அப்படி இருக்கும் போது தான் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாத அமல்களை நாம் செய்ய வழிவகுத்துவிடும். அல்லாஹ்விடம் தண்டனையை பெற்றுத்தரக்கூடிய செயலாக அது அமைந்துவிடும்.

நாமும் இரு மாறுபட்ட கருத்துக்களுக்குடைய ஆதாரங்களை பார்க்கக்கூடிய மூன்றாம் நபராகத்தான் அவைகளை பார்த்தோம். அப்படி பார்க்க முற்பட்ட போது தான், முன்பே குறிப்பிட்டது போல பல தவறான சான்றுகளையும் விளக்கங்களையும் கண்டோம்.

பி.ஜே. சொன்ன கருத்துக்களிலே தவறுகள் இருக்கின்றது என்று சொல்ல இவன் பெரிய இஸ்லாமிய மார்க்க அறிஞனா? மார்க்க ஆராய்ச்சியாளனா? இவன் யார்? என்று யாரும் கேட்கவேண்டிய அவசியமில்லை. அப்படி கேட்க நினைக்கின்றவர்களுக்கு தான் நாம் முன்கூட்டியே மேற்படி விளக்கங்களை தந்துள்ளோம்.

ஒரு பக்கம் மட்டும் பார்த்தவர்கள்

பி.ஜே. யின் கருத்து ஏன் தவறாக இருக்கிறது? என்பதற்கு இவைகள் தான் ஆதாரங்கள் என்று சுட்டிக் காட்டப்பட்ட போதும் பலர் அதை பார்க்கவும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கவும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கான காரணங்களை அவர்களது பேச்சிலிருந்து அறிய முடிந்தது.

மாறுபட்ட கருத்துள்ள ஒரு விஷயத்தை, ஒரு பக்கம் மட்டும் கேட்டு அது சரி என்று ஒருவர் பின்பற்றினால், அவர் இஸ்லாத்தை பின்பற்றுகிறாரோ இல்லையோ, தனிப்பட்ட நபரை பின்பற்றுகிறார் என்பதற்கு அவரே சான்று, வேறு சான்றுகள் தேவையில்லை.

ஆகவே இதைப்படிக்கக் கூடியவர்கள் ஒரு பக்கம் மட்டும் பார்த்து கருத்து வேறுபாடுள்ள ஒரு விஷயத்தை தீர்மானிப்பவர்களாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் கூறிய காரணங்களை அடுத்து பார்ப்போம் இன்ஷh அல்லாஹ்.

மறுபக்கம் பார்க்க மறுப்பவர்களின் நியாயப்படுத்துதல்

நாம் தவறுகளை நிரூபணங்களோடு சேர்த்துச் சொல்லி, ஆகையால் அந்த கருத்து தவறு என்கிறோம். அல்லாஹ்வும், தூதரும் அவ்வாறு சொல்லவில்லை என்கிறோம். மொட்டையாக பி.ஜே. சொல்வது தவறு என்று சொல்லவில்லை, எதிர்க்கவுமில்லை. அதே போலவே அவர் சொல்லும் எல்லா கருத்துகளையும் தவறு என்று சொல்லவோ, எதிர்க்கவோ இல்லை.

(1) தியாகம்:

அவர்களோ! 'பலவருடங்களாக பி.ஜே. ஏகத்துவப் பிரச்சாரம் செய்கின்றார். அதற்காக அடி, உதை வாங்கி பல தியாகங்களை செய்துள்ளார்' என்று சுட்டிக்காட்டி அவர் செய்த தியாகங்கள் சம்பந்தமான ஸிடிகளை வாங்கிப் பாருங்கள் என்று பதிலுக்கு நம்மிடம் சொல்கின்றனர். வேறு சிலர், அவர் செய்த சின்னத் தவறுகளை எல்லாம் ஏன் பெரிது படுத்துகின்றீர்கள்? என்கின்றனர்.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி இஸ்லாத்தை தாங்கி நிற்கும் தூண்களிலே ஒரு தூண் ஜகாத் ஆக இருக்கின்றது. அதை போலவே நபிமொழியின் முக்கியத்துவமும் அணைவரும் அறிந்தது. இப்படிப்பட்ட இஸ்லாமிய அடிப்படை அம்சங்களிலே ஒரு தவறான கருத்து தவறான ஆதாரங்களோடும் விளக்கங்களோடும் பிரச்சாரம் செய்யப்படுவதை சின்ன விஷயம் என்று நினைப்பதே பெரிய தவறு.

அதைவிட முக்கியமான விஷயம், இவர்கள் இப்படிச் சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகின்றனர் என்பதை சிந்திக்க வேண்டும். நல்ல விஷயங்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலே சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இடையிடையே, குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாகவும், அதற்கு விளக்கமாக தங்களது சொந்த கருத்துகளையும் சொல்லலாம், தவறுகள் செய்யலாம், அவைகளை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை என்கின்றனர். தவறுகளை சுட்டிக் காட்டினால், தனி நபரின் பெயருக்கு களங்கம் வரும் அதை நாங்கள் எதிர்ப்போம் என்கின்றனர்.

கட்டிடத்துக்கு அஸ்திவாரம் போட்டவர் அதை சேதப்படுத்தினால் பரவாயில்லை, அதனால் கட்டிடத்துக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடாது என்று அவர்கள் சொல்கின்றனர்.

அஸ்திவாரத்தை இடிக்க முற்படுபவர், அதைப் போட்டவராக இருந்தாலும், கட்டிடத்துக்கு பாதிப்பு உண்டாகும், கட்டிடமே தரைமட்டமாக ஆகிவிடும். இதை கட்டிடத்தின் உரிமையாளர்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது, பார்த்துக் கொண்டு இருக்கவும் கூடாது, என்று நாம் சொல்கிறோம்.

(2) தனி நபர் முக்கியத்துவம்

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொன்ன (இஸ்லாத்)துக்கு ஒரு முஸ்லிம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? அல்லது அதற்கு மாற்றமாக ஒரு தனி நபர் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து (அவரது பெயருக்கு களங்கம் வரும் என்று) அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் சொல்வதை நிராகரிக்கும் நிலைக்கு போக வேண்டுமா?

அல்லது அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாற்றமாக சொன்னாலும் பரவாயில்லை, தனி நபரின் பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்று அதைக் கண்டு கொள்ளாமல் தவறு என்று சொல்லாமல் ஒரு முஸ்லீம் இருக்க வேண்டுமா?

தவறை சுட்டிக்காட்டும் போது, அது உண்மையிலே தவறாக இருக்கும் பட்சத்தில் அதை அவர் ஏற்றுக்கொண்டு கருத்தை மாற்றிக் கொள்ளும் போது, அல்லாஹ் (ஸுப்) அவரது பெயருக்கு எந்த களங்கத்தையும் ஏற்படுத்த மாட்டான் இன்ஷh அல்லாஹ். தவறு என்று தெரிந்தவர்கள் அதை சுட்டிக்காட்டாமல் மௌனம் காத்தால் அவருக்கு அல்லாஹ்விடம் கேள்வி இருக்கின்றது. தவறை செய்தவர் ஏற்றுக்கொள்ளும் போது, அல்லாஹ்வுக்கு பயந்து அதை ஏற்றுக் கொண்டார் என்று அவர் மீதும், அவரது மார்க்கத் தீர்ப்புகளின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை கூடும்.

(3) பி.ஜே.யை எதிர்ப்பவர்கள் தான் தவறு என்று சொல்கிறார்கள்:

இணை வைப்புக்கும், பித்அத்துக்கும் எதிராக பி.ஜே. பிரச்சாரம் செய்கின்ற காரணத்தினால், இணை வைக்கக் கூடியவர்கள் தான் பி.ஜே.யை எதிர்க்கின்றனர். அவர்கள்தான் பி.ஜே.யின் கருத்து தவறு என்கின்றனர். ஆகவே பி.ஜே.யின் கருத்து தவறு என்று யார் சொன்னாலும் நாங்கள் அதை நம்ப மாட்டோம், அவர்கள் தரும் ஆதாரங்களை பார்க்க மாட்டோம் என்று கண்களை அவர்கள் மூடிக்கொள்கின்றனர்.

இணைவைப்புக்கும், பித்அத்துக்கும் எதிராக அவர் பிரச்சாரம் செய்வதை நாம் எதிர்க்கவில்லை. அவரை எதிர்க்கக் கூடியவர்களாக இருப்பதினால், அவரது கருத்து தவறு என்று கூறவில்லை.

அவரது கருத்து தவறானதாக இருப்பதினால் அவரை எதிர்க்கக் கூடியவர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

(4) பேச்சாற்றல் மற்றும் விவாதத்திறமை மிக்கவர்

பேச்சாற்றலினால் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவர். கும்பகோணத்தில் பத்து இலட்சம் முஸ்லிம்கள், அவரது தலைமையிலே குவிந்தனர். படிக்காதவர்களுக்கும் புரியும் வண்ணம் பேசிக்கவரக் கூடியவர். விவாதத்திறமையில் அவரைப் போல் யாருமில்லை. அவரிடம் விவாதம் செய்ய, மற்றவர்கள் பயந்து ஒடுகிறார்கள். சொல்வது உண்மையாக இருந்தால் அவரோடு விவாதம் செய்து உண்மையை நிரூபிக்கட்டும். ஆகவே அவர் கூறுவது தான் சரியான கருத்து என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

பேச்சாற்றல், விவாதத் திறமை என்பதெல்லாம் அல்லாஹ் (ஸுப்) அருளிய ஒரு அருட்கொடை. பேச்சாற்றல் உள்ளவர்கள் சொல்வது எல்லாம் சரியான கருத்து, மற்றவர்கள் சொல்வது தவறான கருத்து என்று சொல்வார்களேயானால், அதை ஒரு அளவு கோலாக எடுப்பார்களேயானால், இவரைவிட பேச்சாற்றல்மிக்கவர்கள் இஸ்லாத்துக்கு வெளியே கூட இருக்கின்றார்கள், என்று நாம் சொல்கின்றோம். அது மட்டுமல்ல பேச்சாற்றலாலும் விவாதத்திறமையினாலும் தவறான கருத்தைக்கூட சரியான கருத்து என்பது போல காட்ட இயலும் என்று நாம் சொல்கிறோம்.

பி.ஜே. அவர்கள் தவறான கருத்தை, சரியானது போல் காட்ட, விவாதத் திறமையை பயன்படுத்தியுள்ளார் என்பதற்கான ஆதாரமும் பின்னால் தரப்பட்டுள்ளது.


(5) த.நா.த. ஜமாத் இயக்கத்தை அழிக்க திட்டம்

த.நா.த. ஜமாத் என்ற இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமையினால் அந்த இயக்கத்தை நசுக்க பழைய சகாக்கள் (த.மு.மு.க) மற்றும் வேறுபல இயக்கங்களும் போடும் திட்டம் தான் இது. ஆகவே அவரது கருத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம், மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள், அதனால் இதனை கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.

த.நா.த. ஜமாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமையினால் அதை அழிக்க நாம், பி.ஜே.யின் கருத்து தவறு என்று சொல்லவில்லை. எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொல்லாததை சட்டமாக்க நினைத்தால், அது நமக்கு ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வந்தால் அதை நாம் எதிர்ப்போம், ஒவ்வொரு முஸ்லிமின் கடமை அது என்று நாம் சொல்கிறோம்.

(6) பி.ஜே.யின் ஆய்வில் தவறு வராது

மார்க்கத்தை அடி வரை சென்று ஆய்வு செய்யக்கூடியவர். அலசி ஆராய்ந்து தான் முடிவெடுப்பார். ஆகவே அவரது ஆய்வும் மார்க்கத் தீர்ப்பும் சரியாகத் தான் இருக்கும் அதில் தவறு வராது என்று அவர்கள் சொல்கின்றனர்.

தனிப்பட்ட ஒரு நபர் கூறுவதுதான் இஸ்லாம் என்று ஏற்க வேண்டும் என்றால், அது அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைத் தான் அப்படி ஏற்க முடியும் என்று நாம் கூறுகின்றோம். மற்ற மனிதர்கள் அனைவரும் தவறிழைக்கக் கூடியவர்களே! என்று நாம் சொல்கின்றோம்.

இஸ்லாத்தின் அளவுகோல்

மேற்கண்ட காரணங்கள் தான் பி.ஜே.யின் கருத்து சரி என்பதற்கு ஆதாரங்களா? இஸ்லாதுக்கு இவைகள் தான் அளவு கோலா?

இவைகள் தாம் ஆதாரங்கள் என்று அவர்கள் கூறுவார்களேயானால், அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றவில்லை தனிநபரை பின்பற்றுகின்றார்கள் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை அவர்களே சாட்சியாக இருக்கின்றார்கள்.

இவைகள் ஆதாரம் இல்லை என்று சொல்வார்களேயானால் சொன்னதோடு நிற்காமல் பி.ஜே. அவர்கள் தரக்கூடிய ஆதாரங்கள் சரியா? தவறா? என்று பார்க்க வேண்டும். நாம் அதை செய்யும் பொழுதுதான் தவறு என்று கண்டுகொண்டோம். அதைத் தான் இனி பார்க்க இருக்கின்றோம் இன்ஷh அல்லாஹ்.

தவறு என்பது தெரிய வந்தால், அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து அதை சம்மந்தப்பட்டவர்களிடமும், பின்பற்றுபவர்களிடமும் இந்த விஷயம் தவறாக இருக்கின்றது என்பதை எத்தி வைக்க வேண்டும். தவறான கருத்தை சொன்னவர் யார்? அவரின் செல்வாக்கு என்ன? அவரைப்பின்பற்ற கோடிக்கனக்கானவர்கள் இருக்கின்றார்கள் நாம் சொல்வது எடுபடாது என்று எல்லாம் பார்த்து, வாய் மூடி மௌனம் காப்பார்களேயானால் அவர்கள் அல்லாஹ்வுக்கு பயப்படவில்லை. ஒரு பெரும் கூட்டத்துக்காக பயந்து அல்லாஹ்வை சந்திப்பதை மறந்து இருக்கின்றார்கள். அந்தக் கருத்துக்கள் சரி என்று ஏற்றுக்கொண்டால் அது அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் உள்ள விஷயம்.

இரு சாராருமே முஸ்லிம்களாக இருக்கின்றோம். மறுமையிலே அல்லாஹ்வின் சந்நிதானத்தில் இந்த வழக்கு வரும் போது, அங்கும் இதே காரணங்களையும், ஆதாரங்களையும் வைப்போம். அல்லாஹ் (ஸுப்) நியாயமான தீர்ப்பைத்தவிர வேறு எதையும் வழங்காதவன். இதை நாம் இரு சாராரும் நினைவுபடுத்திக் கொள்வோமாக!

குர்ஆன் வசனத்தையே...........!

ஜகாத் விஷயத்திலே கடைசியாக நடந்த ஒரு சம்பவத்தை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டிவிட்டு அதன் பின்பு ஜகாத் விஷயத்தை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மதுரையிலே கடந்த 10ஃ02ஃ2007 அன்று ஆரம்பித்து இரண்டு நாட்கள் பி.ஜே. அவர்களுக்கும், நூர் முஹம்மது அவர்களுக்கும் விவாதம் நடந்தது.

திருக்குர்ஆனின் 6:141 வது வசனம் பி.ஜே.யின் சில விளக்கங்களுக்கு எதிராக இருக்கின்றது. அதனால் பி.ஜே. அந்த வசனம் விளைபொருட்களின் ஜகாத்தை குறிக்காது என்று சொல்லி வேறு விளக்கம் கொடுக்கிறாரர்.



அந்த வசனத்துக்கு சரியான விளக்கம் எது என்று தெரிந்து கொண்டே, தான் சொல்ல வருகின்ற ஒரு கருத்துக்கு அது எதிராக இருக்கின்ற காரணத்தினால், அல்லாஹ் (சுப்) சொன்னதையே, அவன் அப்படிச் சொல்லவில்லை என்கின்றார். அதாவது அல்லாஹ் (சுப்) சொன்னதை மறுக்கின்றார்.

ஆதாரங்கள்:

(1) அவரது தர்ஜுமா குர்ஆனிலே 6:141 இன் மொழி பெயர்ப்பை பார்க்கவும்.

(2) 6:141 வசனம் விளை பொருட்களின் ஜகாத்தைக் குறிக்கிறது என்று அவரின் அதிகபடியான விளக்கம். பி.ஜே.யின் தர்ஜுமா குர்ஆன் மூன்றாம் பதிப்பு (3 வது பதிப்பு) பக்கம் 1288.

(3) 6:141 வசனம் விளைபொருட்களை அறுவடை செய்யும் நாளில் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. ஏகத்துவம் பத்திரிக்கை ஜனவரி 2007 பக்கம் 5.

(4) விளைபொருட்களின் அறுவடை தினத்தன்றே ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பி.ஜே. பேசியது. தலைப்பு: சர்ச்சைக்குரிய சட்டங்கள், பாகம் 4, (நேரம் 9வது நிமிடம் முதல் 10வது நிமிடம் வரை)


(5) பேரீச்சம் பழங்கள் அறுவடை செய்யப்பட்ட உடனே ஜகாத்துக்காக கொண்டுவரப்படுவது வழக்கமாக இருந்தது. புகாரி 1485

அல்லாஹ் (ஸுப்) நேரடியாக சொன்னதையே அவன் அப்படிச் சொல்லவில்லை என்று தனது விளக்கத்தைக் கொடுத்து மறுக்கும் போது நபி மொழிகளின் நிலை என்ன?

ஜகாத்

உலகமே ஒருமித்து ஏற்றுக் கொண்டிருக்கின்ற கருத்துக்கு மாற்றமாக ஒரு புதிய கருத்தை ஜகாத் விஷயத்திலே பிரச்சாரம் செய்கின்றார் மதிப்பிற்குறிய மௌலவி பி.ஜே. அவர்கள்.

உலகமே பின்பற்றினாலும், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நான் சொல்கின்ற இந்த புதிய கருத்துக்குத் தான் ஆதாரம் இருக்கின்றது என்று சொல்கின்றார்.

அவரது கருத்து

ஜகாத் ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான். பொருள் வந்தவுடன் அதைக் கொடுத்துவிட வேண்டும். ஆதாரம் (புகாரி – 1404)

அல்லாஹ்வின் தூதர் 'பொருள்களுக்கு தூய்மையாக' அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கி இருக்கின்றான், 'துஹ்ரதன் லில் அம்வால்' என்று சொல்லி இருக்கின்றார்கள்.

இவரது விளக்கம்

பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் என்றால், கொடுத்த பொருள் தூய்மையாகி விட்டது. அதைத் திரும்ப தூய்மைப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக பொருள் வந்தால் அதை தூய்மைப் படுத்துவதற்காக ஜகாத் கொடுக்க வேண்டும். கொடுப்பதற்கு கால இடைவெளி, ஒரு வருடம் என்றோ, ஆறு மாதம் என்றோ ஏதுமில்லை. பொருள் வந்தவுடன் ஜகாத் கொடுத்துவிட வேண்டும். இப்படியாக பொருள் வர வர கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பல விளக்கங்களை பி.ஜே. கொடுக்கின்றார்.

விளக்கங்களில் முரன்பாடு

மேற்கண்ட ஆதாரத்தை முன்வைத்து விட்டு இவர் பல விளக்கங்களைத் தருகின்றார். அந்த விளக்கங்களிலும், உதாரணங்களிலும் பல முரண்பாடுகள் மலிந்து கிடந்தன.

பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் என்று தானே அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக ஆதாரம் காட்டுகிறார், அதிலே கொடுத்த பொருள்களுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டாம் என்றும், புதிது புதிதாய் வரும் பொருள்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்றும், வந்தவுடனே கொடுத்துவிட வேண்டும் என்றும் ஆதாரம் ஏதுமில்லையே! பொருள்களின் தூய்மை என்றால் என்ன? பொருள்களின் அழுக்கு என்றால் என்ன? தூய்மைப்படுத்தப்பட்ட பொருள் திரும்பவும் அழுக்காகாதா? போன்ற இன்னும் பல சந்தேகங்களும் கேள்விகளும் வந்தன. ஆகவே அல்லாஹ்வின் தூதர் கூறியதை எடுத்துப் பார்த்தால் கூடுதல் விளக்கங்கள் கிடைக்கலாம் என்று அந்த 'நபி மொழி' எடுத்துப் பார்க்கப்பட்டது.

ஆச்சரியம், ஆனால் உண்மை!

புஹாரியின் 1404 வது நம்பரை எடுத்துப் பார்த்தால், அது அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அங்கு பதிவு செய்யப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் என்று எதை பி.ஜே. அவர்கள் குறிப்பிட்டார்களோ, அது அல்லாஹ்வின் தூதர் சொன்னது இல்லை.

நபித் தோழர் ஒருவர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது கருத்தாக கூறியது தான் அது. இதை யார் வேண்டுமானாலும் புஹாரியின் 1404வது நம்பரை எடுத்துப் பார்க்கலாம்.

அல்லாஹ்வின் தூதர் சொல்லாததை வைத்து சட்டம்

அல்லாஹ்வின் தூதர் கூறாததை வைத்து தான் ஜகாத் விஷயத்தில் ஒரு புதிய கருத்தை, உலகிற்கு மாற்றமாக பி.ஜே. சொல்கிறார். இது அவருக்கு தெரிய வந்ததும் அதை தவறுதலாக சொல்லிவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார், ஏகத்துவத்தில் எழுதியும் உள்ளார்கள்.

ஆதாரம் தவறு என்றால், அதன் அடிப்படையில் எடுத்த முடிவு?

நடை முறையிலே பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் ஆதாரத்தின் அடிப்படையிலேதான் முடிவெடுக்கிறோம். இது மார்க்க விஷயம். ஆதாரத்தின் அடிப்படையிலேதான் முடிவெடுக்க வேண்டும், என்பதுதான் ஆய்வின் இலக்கணம். தவறான சான்றுகளின் அடிப்படையில் எடுத்த முடிவும் தவறானதாகத்தான் இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதற்கு மார்க்கம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. சான்று தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட 'ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத்' என்ற முடிவும் தவறு.

ஆய்வு செய்தவர் என்ன செய்ய வேண்டும்?

இந்த ஆய்வை செய்த பி.ஜே. அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?. ஒரு பொருளுக்கு ஒரு தடைவ தான் ஜகாத் என்ற கருத்தை மாற்றிக் கொண்டிருக்க வேண்டுமா? இல்லையா?

சொன்னால் சொன்னதுதான்

கருத்து நாங்கள் சொன்னால் அதை மாற்றிக்கொள்ளமாட்டோம். ஆதாரம் தவறாக போய்விட்டால் அதற்கு வேறு ஆதாரம் தயார் செய்வோம், ஆனால் சொன்ன கருத்து சொன்னதுதான், என்று வேறு ஆதாரங்களைக் கொடுத்து, இதுதான் முக்கியமான ஆதாரம் என்கின்றார். பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் என்பது எல்லாம் முக்கியமான ஆதாரம் இல்லை. இது தவறான ஆதாரமாகப் போனாலும், நாங்கள் சொன்ன கருத்துக்கு எந்த பாதிப்புமில்லை என்கின்றார். ஏகத்துவம் செப்டம்பர் 2005, பக்கம் 9 மற்றும் 48.
ஜனவரி 2006, பக்கம் 43.

பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் என்ற ஆதாரத்தை வைத்துதான் அந்த முடிவை எடுத்தார் என்பதை ஜகாத் ஒரு ஆய்வு என்ற சீடியை பார்க்கும் யாரும் புரிந்து கொள்ளலாம்.








பிடிவாதத்தை காட்டுகிறது

சான்றுகளின் அடிப்படையில் முடிவெடுக்காமல், தான் எடுத்த முடிவுக்கு தகுந்த மாதிரி தவறான சான்றுகளை உண்டாக்க கூடிய பிடிவாதக்காரர் என்பதைத் தான் அவரது செயல்பாடுகள் உணர்த்துகிறது.

தவறான ஆதாரம்

ஆதாரம் தவறானதும், அதை ஆதாரமாக வைத்து நான் அந்த முடிவெடுக்கவில்லை என்று பின்வாங்கி வேறு ஒரு ஆதாரத்தை உண்டாக்க முற்படுகிறார்.

அவரின் இந்த கூற்றுப்படி வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வருகின்ற நபி மொழி எல்லாம் பலகீனமாக இருக்கின்றன. ஆகையால் ஜகாத் கொடுப்பதற்கு காலக்கெடு ஏதுமில்லை. கொடு என்று மட்டும் குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் இதை வைத்து ஒரு தடவை கொடுத்தால் போதும் என்று முடிவெடுத்தேன் என்று சொல்கிறார். ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு இது தான் முக்கிய ஆதாரமாம். ஏகத்துவம் - 2005 செப்டம்பர், பக்கம்: 5.
ஏகத்துவம் - 2006 ஜனவரி, பக்கம்: 40.

அவரின் இந்தக் கூற்றுப்படி வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஒரு பலமான நபி மொழி இருந்தால், கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அப்படி ஏதும் இல்லாத காரணத்தினால் தான், கொடு என்ற பொதுவான கட்டளை ஒரு தடவை கொடுப்பதைத் தான் குறிக்கும் என்ற அப்படிடையில், ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்ற முடிவை எடுத்தாராம்.

வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்ற நபி மொழியை ஏற்றுக்கொண்டிருந்த போது.........!

பி.ஜே. கூறுகின்ற காரணம் தவறானது. இதை சாதரணமாக சிந்திக்கின்ற யாரும் அறிந்து கொள்ளலாம். இதற்கு பெரிய ஹதீஸ் கலை ஞானமோ, மார்க்க அறிவோ கூடத் தேவையில்லை. அரபு மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அண்ணன் பி.ஜே. அவர்கள், வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நபி மொழி பலமானதாக இருக்கிறது என்று ஒரு நேரத்தில் ஏற்றுக் கொண்டிருந்தார்.

அப்படி ஏற்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஜகாத் கொடுத்த பொருளுக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும். கொடுத்த பொருளுக்கு திரும்ப தேவையில்லை என்று சொல்லி இருக்க கூடாது. ஏனென்றால், நபி மொழி அப்படி இல்லாததால்தான், 'ஒரு தடவை' என்ற முடிவை எடுத்ததாக சொல்கின்றார்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற காலக்கெடு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டும், கொடுத்த பொருளுக்கு ஜகாத் தேவையில்லை என்றுதான் சொல்கின்றார். இதுவும் ஜகாத் ஒரு ஆய்வு என்ற சிடியில் கானக்கூடியதாக இருக்கிறது.








அப்படியானால், காலக்கெடு இல்லாததால், 'கொடு' என்றால் ஒரு தடவை கொடுத்தால் போதும் என்ற முடிவெடுத்தேன், என்று அவர் தற்சமயம் சொல்லுவது, தவறு என்பது அவரது வாயிலிருந்தே நிரூபிக்கப்பட்டுவிட்டது.

மீண்டும் நிரூபனம்

முதலில் அல்லாஹ்வின் தூதர் சொல்லாததை வைத்து அவர்கள் சொன்னார்கள் என்று சொல்லி ஒரு முடிவெடுத்தார். அந்தத் தவறு சுட்டிக்காட்டப்பட்ட போது, அதை முக்கியமான ஆதாரமாக வைத்து அந்த முடிவை எடுக்கவில்லை என்றார். அது தவறாகப் போனாலும் ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்பதற்கு வேறு முக்கிய ஆதாரம் இருக்கிறது என்றார்.
வேறு ஆதாரம் தான் முக்கிய ஆதாரம் என்று அவர் வைத்ததை, அலசி, அதுவும் தவறு என்று இரண்டாவது முறையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் என்பதற்கு ஆ...தா...ர...ம்...!

அப்படியானால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பதற்கு என்ன ஆதாரம்? ஒரு ஆதாரமுமில்லை. மௌலவி பி.ஜே. அவர்களிடம் இருந்து வந்திருக்கிறது இந்த முடிவு என்பது தான் ஆதாரம். அவரிடம் இருந்து வருவது தான் மார்க்கம் என்று ஒருவர் நினைத்தால், பி.ஜே. அவர்களின் நிலையை எங்கு உயர்த்தி வைத்துள்ளார்கள் என்ற விபரீதம் புரியும். அப்படியெல்லாம் இல்லை என்று மறுப்பார்களேயானால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவரும் மனிதர் தான், அவரிடமும் தவறுகள் வரும். இந்த விஷயத்தில் அவரது கருத்து தவறானது தான் என்று அதை ஒதுக்கிவிட வேண்டும்.

ஆதாரம் கேட்பவராக மாறிய பி.ஜே.

ஆதாரத்தின் அடிப்படையில் தான் எதையும் பின்பற்ற வேண்டும், என்றெல்லாம் பல மேடைகளில் பிரச்சாரம் செய்தவர், செய்து கொண்டிருப்பவர், மதிப்பிற்குறிய மௌலவி சகோதரர் பி.ஜே. அவர்கள்.

ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவெடுத்து அவரது கருத்துக்களை அதில் திணித்து பிரச்சாரம் செய்த காரணத்தினால், அண்ணன் பி.ஜே. அவர்கள், அவர் சொல்லும் கருத்துக்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியாமல் 'நான் ஜகாத் விஷயத்திலே ஆதாரம் கேட்பவனாக மட்டும் இருக்கிறேன், வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பவர்கள்தான் ஆதாரம் தர வேண்டும்' என்று ழுpநn ஆக னுநஉடயசந செய்கின்றார். மதுரையில் நடந்த விவாதத்தில் இப்படிக் கூறுகின்றார்.

இதைக் கேட்பவர்கள் யாருமே, அவர் ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்று முடிவெடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். அதைக் கேட்ட பின்பும் அவர் சொல்வது சரி தான் என்று சொல்பவர்கள் கீழ் கண்ட விளக்கத்தை சிந்திக்கவும்.

ஆதாரம் கேட்பவரானதற்கு அவர் கூறும் காரணம்

ஜகாத் விஷயத்திலே ஆதாரம் எதையும் கொடுக்க வேண்டிய தேவையில்லையாம். மாற்றுக் கருத்துடையவர்கள் வைக்கும் ஆதாரங்களை இவர் சரியில்லை என்று சொல்லிவிட்டால், அவர்களிடம் ஆதாரம் இல்லை என்று அர்த்தமாம். அவர்களிடம் ஆதாரமில்லை என்று பி.ஜே. சொல்லிவிட்டால், இவரின் கருத்து சரி என்று ஆகிவிடுமாம். இவைகளை பி.ஜே. மதுரை விவாதத்திலே சொல்கின்றார். ஏகத்துவத்திலும் எழுதி இருக்கின்றார்கள். இதையும் சரி என்று நம்புகின்றவர்கள் இலட்சக்கனக்கானோர் இன்று தழிழகத்தில் இருக்கின்றனர்.

ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பதற்குத்தான் ஆதாரம் தரவேண்டும். செய்ய வேண்டாம் என்பதற்கு ஆதாரம் தரவேண்டாம், ஆதாரம் கேட்க வேண்டும். இது தான் அவரது கான்செப்ட் . இதைக் கொண்டு வந்து ஜகாத் விஷயத்தில் இணைக்கிறார். இங்குதான் நாம் நமது கவனத்தை செலுத்த வேண்டும்.

ஜகாத்துடன் இணைப்பு

எப்படி இந்த கான்செப்ட் ஐ ஜகாத்துடன் இணைக்கின்றார் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போம். அவரது கான்செப்ட் சரியா? தவறா? என்ற விஷயத்திற்கே நாம் போகவில்லை. அது சரி என்று வைத்துக்கொண்டே பார்ப்போம்.

ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பவர்கள் ஆதாரம் தரவேண்டுமாம். வேண்டாம் என்பவர்கள் ஆதாரத்தை மறுக்கக்கூடியவர்களாக இருப்பார்களாம். ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று ஒரு சாராரும், கொடுக்க வேண்டும் என்று இன்னொரு சாராரும் சொன்னால், அங்கு தான் பி.ஜே.யின் விளக்கப்படி, வேண்டாம் என்பவர்கள் ஆதாரம் கேட்பவர்கள். கொடுக்க வேண்டும் என்பவர்கள் ஆதாரம் தருபவர்கள். ஆனால் இங்கு இரு சாராருமே ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்பவர்கள். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி என்றால் பி.ஜே.யின் கான்செப்ட் இங்கு செயல்படாது. அவரவர்கள் சொல்கின்ற கருத்துக்கு அவரவர்கள் ஆதாரம் தரவேண்டும்.

ஜகாத் கொடுக்க வேண்டும,; அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதை எப்படிக்கொடுக்க வேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடு. ஜகாத் ஒவ்வொரு பொருளுக்கும் தரவேண்டும், ஆனால் ஒரு தடவை கொடுத்தால் போதும். பொருள் வந்தவுடன் கொடுத்துவிட வேண்டும். இது பி.ஜே. சொல்கின்ற முறை.

மேற்கண்ட பி.ஜே. சொன்ன முறையில் ஜகாத், கொடுக்க வேண்டும் என்பதற்கு பி.ஜே. ஆதாரம் தரவேண்டும். பி.ஜே.யின் கான்செப்ட் படி அவர் இப்பொழுது ஆதாரம் தரக்கூடியவராக இருக்கின்றார். எப்படி என்ற விளக்கத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தடவை ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது பி.ஜே.யின் கருத்து. இதற்கு மாற்றமாக உலகம் முழுவதும் பின்பற்றிக்கொண்டிருக்கக்கூடிய மாற்றுக் கருத்தாவது. ஒரு முறை ஜகாத் கொடுத்த பின்பு, அடுத்த வருடம் திரும்பவும் ஜகாத் கொடுக்கும் வரை, இடையில் வருகின்ற பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டாம். இங்கு மாற்றுக் கருத்துடையவர்கள் 'கொடுக்க வேண்டாம்' என்று சொல்லக்கூடிய பொருட்களுக்கு, பி.ஜே. அவர்கள் ஜகாத் கொடுக்க வேண்டும் என்கிறார். அவரது கான்செப்ட்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் ஆதாரம் தரவேண்டும். வேண்டாம் என்று சொல்பவர்கள் ஆதாரம் கேட்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்ற பி.N;ஜ. அதற்குன்டான ஆதாரத்தை தரக்கூடியவராக இருக்கிறார். மாற்றுக்கருத்துடையவர்கள் ஆதாரம் கேட்பார்கள்.

அப்படியானால் அவரது கான்செப்டை செயல்படுத்தினாலும் அவர் ஆதாரம் தரவேண்டும். (மேற்கண்டவாறு). அவரது கான்செப்ட் செயல்படாவிட்டாலும் அவர் ஆதாரம் தரக்கூடியவராக இருக்கிறார். ஏனென்றால் முன்பே குறிப்பிட்டபடி ஜகாத் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடு. அதன்படி ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று யாரும் மறுக்கவில்லை. ஆகையால் அவரவர் கருத்துக்கு அவரவர் ஆதாரம் தரவேண்டும். இதுதான் உண்மை. இதை நிரூபித்துள்ளோம்.

ஆனால் அவர் சொல்லும் கருத்துக்கு ஆதாரம் தர வேண்டியதில்லை என்று ஒரு கான்செப்ட் ஐ முன் வைக்கிறார். அந்த கான்செப்ட் தவறு என்பது வேறு விஷயம். ஆனால் அவர் உண்டாக்கிய கான்செப்ட் படி அவர் ஆதாரம் கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார், அல்ஹம்துலில்லாஹ்.

இந்த பி.ஜே.யின் கான்செப்ட் வரக்காரணம் என்ன? என்பது எல்லோருக்கும் புரிந்து இருக்கும் என நினைக்கின்றோம். அதாவது பி.ஜே. ஜகாத் விஷயத்திலே ஒரு புதிய கருத்தை பிரச்சாரம் செய்கின்றார். அவர் அந்த முடிவை எடுக்க எதை ஆதாரம் என்று நினைத்தாரோ, அது உண்மையிலே ஆதாரமாக இல்லை. அவர் எடுத்த முடிவு எந்த ஆதாரமும் இல்லாமல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. ஆதாரம் இல்லாததனால் இந்த கான்செப்ட் ஐ முன்வைத்து ஏதும் ஆதாரம் இல்லாமலே அந்தக் கருத்தை சொல்வேன் என்கின்றார்.

நிலைமை இப்படி இருக்க......!

குர்ஆன் வசனத்திற்கே (6:141) உண்மையான அர்த்தத்திற்கு மாற்றமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதை ஆரம்பத்திலே சுட்டிக்காட்டியுள்ளோம். நபி மொழி பலமானதை, பலகீனமாக்குவது அவர்களுக்கு பெரிய விஷயமல்ல. பேச்சாற்றல், விவாதத்திறமை அதற்கு உதவி செய்யும். பி.ஜே. அவர் சொல்கின்ற கருத்திற்கு எந்த ஆதாரமும் வைக்காமல், 'மாற்றுக் கருத்துடையவர்களின் ஆதாரம் எல்லாம் சரியில்லை என்று சொல்லிவிட்டேன்', ஆகவே எனது கருத்துதான் சரி என்கிறார். அது சரிதான் என்று ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களும் பலர் இருக்கின்றனர்.

விவாதம் என்ற பெயரில்

மாற்றுக் கருத்துடைய, உண்மையிலே ஜகாத் விஷயத்தை மற்றவர்களைவிட அதிகமாக ஆய்வு செய்த மௌலவி நூர் முஹம்மது பாகவி அவர்களுடன் மதுரையிலே விவாதம் என்ற பெயரில் மூன்று நாட்கள் மேற்சொன்ன விஷயங்கள்தான் நடந்தேறின. இதை 17 சிடிகளிலே பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். அவைகளை நடுநிலையோடு பாருங்கள் உண்மை தெரியும் என்று சகோதரர் பி.ஜே. சொல்கின்றார்.

அவைகளை நடுநிலையோடு பார்த்த போது கண்ட உண்மைகளைத்தான் நாம் எடுத்து சொல்லி இருக்கிறோம், அந்த (6:141) விளக்கம் உட்பட.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத்

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை. அப்படி ஆதாரம் ஏதும் இல்லாததால்தான் ஜகாத் 'கொடு' என்ற சொல்லை மட்டும் வைத்து, புரிந்து கொண்டு, ஒரு தடவை கொடுத்தால் போதும் என்ற முடிவெடுத்ததாக ஏகத்துவம் கூறுகின்றது. ஏகத்துவம் 2005 செப்டம்பர், பக்கம்: 05. 2006 ஜனவரி, பக்கம்: 40.

அப்படியானால் கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சரியான ஆதாரம் இருந்தால், ஒரு தடவை கொடுத்தால் போதும் என்ற முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சரியான ஆதாரம்

புஹாரியில் இடம்பெறக்கூடிய ஸஹிஹான ஹதீஸ்.

ஒரு மனிதனிடம் 40 முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் 01 ஆடு ஆகும். 121 முதல் 200 வரை 02 ஆடுகள் ஆகும். 201 முதல் 300 வரை 03 ஆடுகள் ஆகும். 300க்கு மேல் ஒவ்வொரு 100 ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத்தாகும்.

ஆடுகள் அதிக பட்சம் ஆடுகள் ஜகாத்

முதல் நிலை 40 – 120 வரை 80 01
இரண்டாம் நிலை 121 – 200 வரை 80 02

மூன்றாம் நிலை 201 – 300 வரை 100 03

301ல் இருந்து ஒவ்வொரு 100க்கும் 01

முதல் நிலையில் உள்ள ஒருவன் அதிகபட்சமாக வைத்திருக்கும் 80 ஆடுகளுக்கும் ஜகாத் ஒரு ஆடு என்று அல்லாஹ்வின் தூதர் சொல்கின்றார்கள். அதன்படி அவன் ஜகாத்தாக ஒரு ஆடு கொடுத்துவிடுவான்.

ஆடுகள் பெருகியதால் அவன் இரண்டாம் நிலையை அடைந்துவிட்டான். (121 – 200) அதிகபட்சமாக இங்கும் 80 ஆடுகளே உள்ளன. இப்பொழுது இவன் இந்த 80 ஆட்டுக்கும் 02 ஆடுகள் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் சொல்கின்றார்கள்.

மதிப்பிற்குறிய மௌலவி பி.ஜே. அவர்களின் கருத்துப்படி இரண்டாவது நிலையை அடைந்த அவன் ஒரு ஆடுதான் கொடுக்க வேண்டும். ஏன்என்றால் ஏற்கனவே ஒரு ஆடு ஜகாத் கொடுத்து 120 வரை உள்ளதை தூய்மைப்படுத்திவிட்டான். 121 – 200 வரை உள்ள 80 ஆடுகளுக்கும் ஒரு ஆடுதான் ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் முதல் நிலைக்கு உள்ள ஒரு ஆட்டையும் சேர்த்து மொத்தம் இரண்டு ஆடுகள் ஜகாத் கொடுக்கச் சொல்கின்றார்கள். இப்படியாக எந்த நிலையில் எடுத்துப் பார்த்தாலும் கொடுத்த பொருளுக்கும் சேர்த்துதான் ஜகாத் கொடுக்கச் சொல்லி இருக்கின்றார்கள்.

ஜகாத் கொடுத்தால் பொருள் தூய்மையாகிவிடுகிறது. ஆகையால் கொடுத்ததை விட்டுவிட்டு புதிதாய் வரும் பொருளுக்குத்தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றமாக, கொடுத்த பொருளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும், என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பது இங்கு நிரூபிக்கப்பட்டு, எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ஜகாத் விஷயத்தில் பி.ஜே.யின் நிலைப்பாடு அன்று முதல் இன்று வரை

ஜகாத் விஷயத்தில் ஒரு புதிய கருத்தை பி.ஜே. அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த அன்று முதல் இன்று வரை அவரது நிலைப்பாட்டை நடுநிலமையோடு கவனிக்கும் யாருமே அவரது நிலைப்பாடு சரி என்று கூறமுடியாது. அதை சுருக்கி எளிதாக்கி கீழே தரப்பட்டுள்ளது.

(1) முதல் நிலைப்பாடு

ஜகாத் கொடுத்தால் பொருள் தூய்மை அடைகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவர்கள் அப்படி சொல்லி இருக்கும் காரணத்தினால், ஜகாத் கொடுத்து தூய்மையாக்கிவிட்ட பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டாம். அதாவது ஒரு பொருளுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும்.
இதை ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் போது கொடுத்ததை விட்டுவிட்டு புதிதாய் வந்ததற்கு கொடுக்க வேண்டும். ஆதாரம்: ஜகாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பின் பி.ஜே. பேசியது. இதற்கான ஏஐனுநுழு ஊடுஐP தரப்பட்டுள்ளது.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறவில்லை. ஆகையால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பது தவறு என்று நாம் முன்பே கண்டோம். அதை சரி என்று வைத்துக் கொண்டாலும் இரு முரண்பட்ட கருத்துக்களைச் சொல்லி அதன்படி ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பி.ஜே. சொல்கின்றார். அதையும் நம்பி மக்கள் எற்றுக் கொண்டனர்.

முரண்பட்ட இரு அம்சங்கள்

அதாவது ஒன்றை செயல்படுத்தினால் மற்றொன்றை செயல்படுத்தவே முடியாதபடி உள்ள இரண்டு அம்சங்களை ஜகாத் விஷயத்திலே சொல்லி, மக்களை அதன்படி ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஒரு ஆறேழு வருடங்களுக்கு முன்பாக பிரச்சாரம் செய்கின்றார்.

முதல் அம்சம், பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜகாத் கொடுத்து பொருட்களை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். புதிதாய் பொருள் வந்தால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளை தவிர்த்துவிட்டு புதிதாய் வந்த பொருளுக்கு கொடுக்க வேண்டும்.

இரண்டாவது அம்சம், ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும்.

இவை இரண்டையுமே ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது. அப்படி செயல்படுத்த முடியாததை அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருக்க மாட்டார்கள்.

விளக்கம்: முதல் அம்சம்:
புதிதாய் பொருள் வந்தால், ஜகாத் கொடுத்து தூய்மையாக்க வேண்டும். இதை செயல்படுத்தினால், பொருள் வரும்போதெல்லாம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற அம்சத்தை செயல்படுத்த முடியாது. ஏனென்றால் புதிதாய் பொருள் வந்தவுடன் ஜகாத் கொடுத்து தூய்மையாக்கிவிட வேண்டும். ஒரு வருடம் வரை தாமதிக்க இயலாது. முதல் அம்சத்தை (பொருளைத் தூய்மைப்படுத்துவது) செயல்படுத்தினால், இரண்டாவது அம்சத்தை (வருடா வருடம் ஜகாத் கொடுப்பது) செயல்படுத்த இயலாது.

இரண்டாவது அம்சம்:
வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற அம்சத்தை செயல்படுத்தினால் ஜகாத் கொடுத்த நாளிலிருந்து அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும் வரை சம்பாதிக்கும் எதையும் செலவு செய்யக்கூடாது. அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும் போதுதான் அவை தூய்மையாகும். அதுவரை புதிதாய் வந்த பொருள் ஒரு பைசா கூட செலவு செய்யக்கூடாது. புதிதாய் வந்த பொருட்களையெல்லாம் சேர்த்து, அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும்வரை செலவு செய்யாமல் பாதுக்காக்க வேண்டும். ஆக இரண்டாவது அம்சத்தை (வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை) செயல்படுத்தினால் முதல் அம்சத்தை (பொருளை தூய்மைப்படுத்துவது) செயல்படுத்த முடியாது.

பி.ஜே.யின் இந்த முதல் நிலைப்பாட்டை எடுத்து காண்பிக்க என்ன காரணம் என்றால், அவர் தவறு செய்துவிட்டார் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்கல்ல. செயல்படுத்த முடியாத ஒரு சட்டத்தைச் சொல்கின்றார், அதையும் நாம் ஏற்றுக்கொண்டிருந்தோம். என்பதை நாம் உணர வேண்டும்.

செயல்படுத்த சாத்தியமே இல்லாத இந்தச் சட்டத்தை சொல்லும் போதாவது ஏதோ சான்றுகள் என்று எதையோ கொடுத்தார். அது தவறானது என்பது வேறு விஷயம். அதாவது தவறான ஆதாரத்தை கொடுத்தார், செயல்படுத்தவே முடியாத சட்டத்தை, அல்லாஹ்வின் தூதர் சொன்னதாகச் சொன்னார். அவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டோம்.

தற்சமயம் ஆதாரம் ஏதும் கொடுக்க மாட்டேன், ஆதாரம் 'கொடு' என்று மாற்றுக்கருத்துடையவர்களை கேட்பேன் என்று சொல்லி, உலகுக்கு மாற்றமான ஒரு கருத்தைச் சொல்கின்றார். இதையும் ஏற்றுக்கொள்ள இலட்சக்கணக்கானவர்கள் இன்று இருக்கிறார்கள்.

அவர் தவறான ஆதாரத்தை கொடுத்து ஒரு சட்டத்தைச் சொன்னாலும், அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். அந்த ஆதாரம் தவறாகப் போனதால், எந்த ஆதாரமும் இல்லாமல் அதே சட்டத்தைச் சொல்கிறார், இதையும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். (ஆதாரம் தர வேண்டாம் என்று சொன்னதை மதுரை விவாத சிடிகளில் பார்க்கலாம்)

அப்படி என்றால், ஏதோ ஒரு அம்சம் அல்லாஹ்வின் தூதர் சொல்லாதது. பொருட்களுக்குத் தூய்மையாகத் தான் ஜகாத் என்பது அல்லாஹ்வின் தூதர் சொல்லாததாக இருக்க வேண்டும். இல்லையெனில் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் தூதர் சொல்லாததாக இருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே அல்லாஹ்வின் தூதர் சொன்னதுதான் என்று பி.ஜே. அவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள் அதையும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

(2) இரண்டாவது நிலைப்பாடு

பின்பு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அடுத்தகட்ட பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றார்.

பொருட்கள் வந்தவுடன் ஜகாத் கொடுத்துவிட வேண்டும். ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது அல்லாஹ்வின் தூதர் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று சொல்கின்றார். அந்த முதல் கருத்து 'பொருட்களுக்குத் தூய்மையாக ஜகாத்' என்பது அல்லாஹ்வின் தூதர் சொன்னது. வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் சொல்லாதது என்ற முடிவுக்கு வந்து பிரச்சாரம் செய்கின்றார். இதையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

(3) மூன்றாவது நிலைப்பாடு

ஆனால் பொருட்களுக்குத் தூய்மையாக ஜகாத் என்ற கருத்து தான் தவறானது என்று மௌலவி நூர் முஹம்மது பாகவி முதலில் அதை அறிவிக்கின்றார்.

இதை ஏன் தவறானது? என்று ஆரம்பத்திலேயே விளக்கியுள்ளோம். அதாவது அல்லாஹ்வின் தூதர் 'பொருட்களுக்கு தூய்மையாக ஜகாத்' என்று கூறியதாக, சகோதரர் பி.ஜே. வைத்த ஆதாரம் (புகாரி: 1404) தவறானது.

இங்கு தான் மக்கள் கவனிக்க வேண்டும். பி.ஜே.யின் ஆதாரம் தவறானது என்று தெரிந்த பின், அவர் சொல்வதாவது, ஒரு வாதத்துக்கு 'பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத்' என்பது தவறாகப் போனாலும், ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பதில் மாற்றமில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றார். இது தான் மூன்றாவது நிலைப்பாடாக இருக்கின்றது.

(4) நான்காவது நிலைப்பாடு

'நீங்கள் கூறியபடியான ஆதாரம் புகாரியில் இல்லை. பின்பு எப்படி ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்ற முடிவை எடுத்தீர்கள்?' என்ற கேள்விகள் வந்தன. அதை தவறுதலாக சொல்லிவிட்டேன், ஆனால் வேறு ஒரு ஆதாரம் இருக்கின்றது என்று அபு-தாவூதில் இருந்து வேறு ஒரு நபி மொழியைக் காட்டினார். அந்த நபி மொழிக்கும், பொருளை தூய்மைப்படுத்தும் என்பதற்கும் சம்பந்தமில்லை. அதனோடு அது பலகீனமானதும்கூட. இது விஷயமாகத்தான் நூர் முஹம்மது பாகவி அல்-ஜன்னத்தில் எழுதியதும், அதற்கு ஏகத்துவத்தில் இவர்கள் பதில் எழுதியதும். அவைகளை படித்த அதிகமான நபர்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது. தனிப்பட்ட நபர்கள் மீதான வசைப்பாடுதல்கள்தான் அவைகளில் அதிகமிருந்தன.

(5) ஐந்தாவது நிலைப்பாடு

'பொருட்களைத் தூய்மைப்படுத்தத்தான் ஜகாத்' என்பதை நாம் முக்கியமான ஆதாரமாக வைத்து அந்த முடிவை எடுக்கவில்லை என்று கூற ஆரம்பித்தார். அது ஒரு துணை சான்றுதான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கூறினார். ஒரு வாதத்துக்கு அது தவறாகப் போனாலும் ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்றார். இவர் இப்படியெல்லாம் கூறியதை ஏகத்துவம் செப்டம்பர் 2005, மற்றும் ஏகத்துவம் ஜனவரி 2006 அவைகளில் பார்க்கலாம். மதுரையில் நடந்த விவாத சிடிகளிலும் பார்க்கலாம்.

இதைப் போலவே நாம் முன்பே குறிப்பிட்டபடி பொருட்களைத் தூய்மைப்படுத்ததான் ஜகாத் என்ற ஆதாரத்தை அடிப்படையாக வைத்துதான் அந்த முடிவை எடுத்தார் என்பதை 'ஜகாத் ஒரு ஆய்வு' என்ற சிடியை பார்க்கும் யாரும் தெரிந்து கொள்ளலாம். நாமும் ஏனைநழ ஊடipள தந்திருக்கிறோம்.

அப்படியானால் முக்கிய சான்று என்ன? என்ற கேள்விகள் வந்தது. அதற்கு அவர் சொல்வது வருடா வருடம் கொடுப்பதற்கு எந்த சான்றும் இல்லை. அல்லாஹ் (ஸுப்) ஜகாத் கொடு என்று சொல்லி இருக்கின்றான். கொடு என்றால் ஒரு தடவையைத் தான் குறிக்கும். ஆகவே ஒரு தடவை கொடுத்தால் போதும் என்கின்றார்.

இதுவும் தவறு என்று நாம் முன்பே நிரூபித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல ஒரு தடவை ஒருவன் ஜகாத் கொடுத்து விட்டால் திரும்பவும் வாழ்நாள் முழுவதும் ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று தான் அவர் சொல்வதற்கு அர்த்தம். ஆனால் புதிதாய் பொருள் வரும் போது மறுபடியும் கொடுக்க வேண்டும் என்று விளக்கம் கொடுக்கிறார். அவர் சொல்கின்ற கருத்துக்கு மாற்றமாக அவரே விளக்கம் கொடுக்கின்றார்.

கொடு என்ற பொதுவான ஒரு கட்டளை வாக்கியத்தை வைத்துக் கொண்டு தான் ஜகாத் விஷயத்திலே இவ்வளவு சட்டங்களையும் வகுத்தாரா? என்ற சந்தேகங்களும், கேள்விகளும் மக்கள் மனதிலே உண்டாகியது. 'கொடு' என்பது ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வார்த்தை. எப்படிக்கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? என்பதற்கு விளக்கங்கள் அதில் இருந்து எடுக்க முடியாது என்பது சாதாரனமாக யாருக்கும் தெரியக்கூடிய விஷயம். எப்படி கொடுக்க வேண்டும் என்ற மேலதிக விளக்கங்களை நபி மொழியல் இருந்துதான் எடுக்க வேண்டும். எப்போது கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க நபி மொழி ஏதும் இல்லை என்று பி.ஜே. சொல்கிறார். அதாவது எப்போது கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்வோ, தூதரோ சொல்லவில்லை என்கிறார். ஜகாத் என்ற கட்டாயக் கடமையை எப்போது நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் சொல்லவில்லை என்கிறார். அவர் சொல்லியது சரிதான் என்று நினைத்திருந்தவர்கள்கூட இந்த விஷயத்தில் பி.ஜே. சொல்லும் கருத்துக்கு ஆதாரம் இல்லையே! என்று யோசிக்க ஆரம்பித்தனர். இப்படி யோசிக்க ஆரம்பித்தவர்கள் குறைவு. ஆனால் அதையும் நம்பக்கூடியவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.

(6) ஆறாவது நிலைப்பாடு, தற்போது உள்ள நிலைப்பாடு

தற்சமயம் அவர் கூறுவது: ஜகாத் விஷயத்தில் நான் கூறும் கருத்துகளுக்கு, ஏதும் ஆதாரங்களை நான் தரவேண்டியதில்லை. மாற்றுக் கருத்துடையவர்கள்தான் ஆதாரம் தரவேண்டும். நான் அவர்களிடம் ஆதாரம் கொடு என்று கேட்பேன்.

அதன் பின்பு அந்த ஆதாரம் சரியாக இருக்கிறது என்று பி.ஜே. ஏற்றுக் கொண்டால், மாற்றுக் கருத்து சரியாம். அவர் ஆதாரம் சரியில்லை என்று ஒதுக்கிவிட்டால் பி.ஜே.யின் கருத்து சரியாம். இப்படி சொன்னதோடு நிற்காமல் அதை செயல்படுத்தியும் காட்டினார். இதைப் பார்க்க விரும்புபவர்கள் மதுரையில் நடந்த ஜகாத் விவாத சிடிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பார்க்கலாம். இப்படி அவர் கூறுவது, அவர் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு முக்கிய கடமையான ஜகாத் விஷயத்தில் தனது கருத்துக்களை புகுத்தி ஒரு தவறான சட்டத்தை வகுத்துவிட்டார் என்பதைத்தான் காட்டுகிறது.

இதுமட்டுமல்ல ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதும் அதை உறுதிப்படுத்துகிறது. இதையும் நம்பி பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி இவர் ஆதாரம் தரவேண்டியதில்லை என்பதற்கு அவர் சொல்லும் காரணங்கள் அவருக்கு எதிராகவே உள்ளதை ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

தமிழக முஸ்லீம்களுக்கு

தமிழக முஸ்லீம் சகோதரர்களுக்கு, நாம் வைக்கும் அன்பான வேண்டுகோள் இது தான். யாரையும் கண்னை மூடிக்கொண்டு ஆதரிக்காதீர்கள், அதைப் போலவே கண்னை மூடிக்கொண்டு எதிர்க்கவும் செய்யாதீர்கள். அப்படி செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

குர்ஆன், நபி வழிதான் நம் வழி. அதன்படி யார் சொன்னாலும் கேட்டு நடப்போம். அதற்கு மாற்றமாக யார் சொன்னாலும் தட்டிக்கேட்போம். தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உணர்த்துவோம். அது முடியவில்லை எனின் குறைந்த பட்சம் நம் அளவிலாவது தவறான கருத்துகளில் இருந்து விலகிக்கொள்வோம்.

நாம் இதுவரை பல விஷயங்களை பார்த்தோம். இனி ஒரு சில விஷயங்களையும் பார்க்க இருக்கின்றோம். இதை அனைத்தையும் பார்க்க முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள் குறைந்த பட்சம் ஜகாத் விஷயத்தில் பி.ஜே.யின் நிலைப்பாடு 'அன்றிலிருந்து இன்றுவரை' என்ற தலைப்பில் ஆறு நிலைப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. இவைகளை மட்டுமாவது தயவு செய்து பார்க்கவும். மறுபடியும் அன்போடு நாம் வைக்கும் முக்கியமான வேண்டுகோள். அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும் மட்டும் பயந்து, யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடு படிக்கிறேன் என்று அல்லாஹ்விடத்தில் உறுதி மொழி எடுத்துக்கொண்டு படியுங்கள். அதில் வரும் விஷயங்களுக்கு மேலதிக விளக்கங்களும் முன்பு தரப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அதைப் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், நம்மை தொடர்பு கொள்ளலாம்.

அதன் பின்பு அவர்களின் முடிவுக்கு அவர்களே பொறுப்பு. ஒருவர் செய்யும் பாவங்களுக்கு, மற்றவர்களை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

இதுவரை நாம் பகிர்ந்து கொண்டவை:

(1) ஜகாத் விஷயத்தில் மதிப்பிற்குறிய சகோதரர் பி.ஜே. அவர்களின் கருத்து ஏன் எற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது? என்பதை ஆதாரங்களுடன் பார்த்தோம்.

(2) சரியான கருத்து என்ன? என்பதிலே ஒரு பகுதியை பார்த்திருக்கின்றோம். அது கொடுத்த பொருளுக்கும், திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதற்கான ஆதாரங்களையும் பார்த்தோம்.

(3) இனி நாம் பார்க்க இருப்பது, எப்போது ஜகாத் கொடுக்க வேண்டும்? என்பதை.

ஜகாத் எப்போது கொடுக்க வேண்டும்?

ஜகாத் எப்போது கொடுக்க வேண்டும்? என்ற கேள்வியே எப்போது வரும் என்றால் கொடுத்த பொருளுக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் என்று வரும் போதுதான். நன்றாக சிந்திக்கும் போது நாம் இதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

கொடுத்த பொருளுக்கு திரும்ப தேவையில்லை என்று இருந்தால் புதிதாய் வரும் பொருளுக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும். புதிதாய் எப்போது பொருள் வருகின்றதோ அப்போது கொடுக்க வேண்டும். ஒரு வருடம் கழித்து கொடு என்றோ, ஆறு மாதம் கழித்து கொடு என்றோ சொல்ல முடியாது. ஒருவருக்கு இரண்டு நாளில் பொருள் வரலாம், அடுத்தவருக்கு இரண்டு மாதத்தில் வரலாம் இப்படியாக மாறுபடும்.

அதாவது கொடுத்த பொருளுக்கு ஜகாத் இல்லை என்றால், அங்கு காலக்கெடு கிடையாது. இது மேலே விளக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே காலக்கெடு இருந்தால், கொடுத்த பொருளுக்கு ஜகாத் இல்லை என்பது அடிபட்டுப் போய்விடும். ஏன்னென்றால் கொடுத்த பொருளை தவிர்த்து புதிதாய் வந்த பொருளுக்கு கொடுக்க வேண்டும் என்றால், புதிதாய் வருவதையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான், செலவு செய்ய இயலாது. இதை முன்பே விளக்கியுள்ளோம். தேவைப்பட்டால் அதைப்பார்த்துக் கொள்ளலாம்.

கால இடைவெளியில் அதாவது வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்றால், கொடுக்கின்ற நேரத்தில் கையில் இருப்பவைகளுக்கு கணக்கிட்டு 2.5மூ கொடுக்க வேண்டும். அதில் கொடுத்த பொருளும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், புதிதாய் வந்த பொருளும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பொருளுக்கு முக்கியத்துவம் இல்லை.

ஆனால் பி.ஜே. அவர்கள் பொருளுக்குத் தூய்மை ஜகாத் என்று தவறான ஆதாரத்தின் அடிப்படையில் 'கொடுத்த பொருள்', 'புதிதாய் வந்த பொருள்' என்று பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதினால் வந்த கோளாறுதான் எல்லாம்.

ஆகவே கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் உண்டா? இல்லையா? என்பதைத்தான் முதலில் பி.ஜே. முடிவு செய்ய வேண்டும். திரும்பவும் கொடுக்க வேண்டும் என்று அவர் ஏற்றுக்கொண்டால், பின்பு எப்போது திரும்ப கொடுக்க வேண்டும், வருடா வருடமா? என்ற கேள்வியை எழுப்பலாம். ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறாதா? என்று கேட்டால், 'கொடுத்த பொருளுக்கு திரும்பவும் கொடுக்க வேண்டும்' என்பதை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். அப்பொழுதுதான் அந்த கேள்வியை எழுப்ப முடியும். ஆனால் பி.ஜே. வருடா வருடம் ஜகாத் கொடுக்க சரியான நபி மொழி இருக்கின்றதா? கொடுத்த பொருளுக்கே திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கின்றதா? என்று இரண்டையும் கேட்கின்றார். இரண்டையும் நாம் கொடுக்கின்றோம். ஒரு பொருளுக்கு ஒரு தடவையா? திரும்பவும் கொடுக்க வேண்டுமா? அதை முதலில் முடிவு செய்வோம். அதற்கு ஆதாரத்தை அவரும் கொண்டுவரட்டும், நாமும் தருவோம். அவர் ஆதாரம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை என்கின்றார். ஆனால் நாம் ஆதாரம் கொடுத்திருக்கின்றோம். அவரது கருத்து எந்த ஆதாரமும் இல்லாமல், அவரது கருத்தாக சொல்லப்பட்டவைதான் என்பதை இதில இருந்தே புரிந்து கொள்ளலாம்.

ஏன் என்றால் அல்லாஹ் (ஸுப்) ஜகாத், தர்மம் இவைகளைக் கொடுத்தால், கொடுத்த மனிதன் தூய்மைப்படுத்தப் படுகிறான் என்றும், தர்மம் சில பாவங்களுக்கு பரிகாரம் என்றும் சொல்கின்றான்.

9:103 – ஜகாத் கொடுத்த மனிதன் தூய்மை அடைகிறான்.
92:18 – தர்மம் கொடுத்த மனிதன் தூய்மை அடைகிறான்.
2:271 - தர்மம் சில பாவங்களுக்கு பரிகாரம்.

ஜகாத்துக்கும் தூய்மைக்கும் என்ன உறவு என்பதை அல்லாஹ் 9:103ல் தெளிவாக சொல்லிவிட்டான். அல்லாஹ் சொல்கின்றபடி, ஜகாத் கொடுக்கும் அந்த நேரத்தில் இருக்கின்ற செல்வத்தில் 2.5மூ கொடுத்தால் ஜகாத் கடமையை நிறைவேற்றியவனாவான், அதன் மூலம் தூய்மைப் படுத்தப்படுகிறான்.

ஜகாத் கொடுத்தால் மனிதன் தூய்மைப் படுத்தப்படுவதை;ச் சொன்ன அல்லாஹ் (ஸுப்), பொருள் தூய்மை அடைகிறது என்றால் அதையும் சேர்த்தே சொல்லி இருப்பான். அல்லாஹ் அறிந்தவன். அவன் சொல்லாததை நாமாக தவறான அடிப்படையில் விளங்கிக் கொண்டு, கொடுத்த பொருளுக்கு திரும்பவும் கொடுக்க வேண்டுமா? என்றெல்லாம் கேட்பது சரியான ஒரு நிலைப்பாடில்லை. மக்களிடையே குழப்பம் தான் மிஞ்சும்.

ஆகவே வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று இருந்தாலே, கொடுத்த பொருளுக்கும் சேர்த்துதான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது தெளிவு. இதை எதற்கு விளக்குகின்றோம் என்றால் பி.ஜே. அவர்கள் தற்சமயம் கேட்பது என்னவென்றால், வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருந்தால் மட்டும் போதாது, கொடுத்ததற்கே திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் ஹதீஸ் வேண்டும் என்கின்றார். அவர் இப்படிச் சொல்லிவிட்ட ஒரே காரணத்தினால் இலட்சக்கணக்கானோரின் உதடுகளும் இதையே உச்சரிக்கின்றன. இதை எப்படிக் கொடுக்க முடியும்? 'இல்லாத ஊருக்கு வழி' கேட்டால் எப்படி சொல்ல முடியாதோ, இவர்கள் கேட்பதும் நூறு சதம் அதேயே தான்.

நான் சொன்ன ஹதீஸ் தவறு என்று சொன்னீர்கள் அல்லவா? ஆகவே நீங்கள் எதை ஆதாரமாக வைத்தாலும் இல்லை என்போம். பின்பு அதையே இலட்சக்கணக்கானோரும் சொல்வார்கள் என்பது போல் இருக்கின்றது அவர் சொல்வது. விவாதத்திலே 6:141க்கு விளக்கம் சொன்னது போல.

அதைப் போலவே கொடுத்த பொருளுக்கு திரும்ப ஜகாத் கொடுக்க வேண்டும் என்றாலே, அங்கு ஒரு காலக்கெடு இருக்கின்றது என்பதும் தெளிவு. கொடுத்த பொருளுக்கும் சேர்த்து ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை முன்பே புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஆடு சம்பந்தமான ஹதீஸில் பார்த்தோம். ஆகவே ஒரு காலக்கெடு இருக்க வேண்டும் என்பதையும் அந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.

காலக்கெடு இருக்கிறது

இதை யாவரும் மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம். ஒரு காரியத்தை செய்து கொண்டே இருங்கள் என்று சொன்னால், அங்கு கால இடைவெளி இல்லை. அந்த காரியத்தையே திரும்பவும் செய்யுங்கள் என்றால், ஒரு இடைவெளிவிட்டு திரும்பவும் செய்யுங்கள் என்று அர்த்தம். அந்த இடைவெளி ஒரு நாளாக இருக்கலாம், ஒரு மாதமாக இருக்கலாம் அல்லது ஒரு வருடமாக இருக்கலாம். ஒரு காலஇடைவெளியில் அதைச்செய்ய வேண்டும் என்பது தெளிவு. காலஇடைவெளி இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் திரும்பவும் செய்யுங்கள் என்று சொன்னாலே ஒரு இடைவெளிக்கு பிறகு செய்யுங்கள் என்றுதான் அர்த்தம். தொடர்ந்து செய்யுங்கள் என்றால் இடைவெளி கிடையாது தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டியது தான்.

கொடுத்த பொருளுக்கும் திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை புகாரியில் இடம் பெற்ற பலமான நபி மொழி மூலம் முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடுத்த பொருளுக்கும் திரும்பவும் கொடுக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு இடைவெளி (காலக்கெடு) உண்டு. எத்தனை ஆடுகள் இருந்தால், எத்தனை ஆடுகள் ஜகாத் கொடுக்க வேண்டும், என்பதை விளக்குவது தான் அந்த நபி மொழியின் நோக்கம். கால இடைவெளி நிச்சியமாக உண்டு என்பதை அது நிரூபிக்கிறது.

கால இடைவெளியை அறிவிக்கக்கூடிய வேறு நபி மொழிகள் இருக்கின்றன. அதைப் பின்னால் பார்ப்போம். இங்கு நாம் சொல்ல வருகின்ற விஷயம், கொடுத்த பொருளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நபி மொழி சொல்லிக் கொண்டிருக்க, மாற்றமாக கொடுத்த பொருளுக்கு தேவையில்லை என்று பி.ஜே. சொல்லிக்கொண்டு இருக்கிறார். காலக்கெடு இருக்கிறது என்று நபி மொழி சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு மாற்றமாக காலக்கெடு இல்லை என்று பி.ஜே. சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் எந்த ஆதாரமும் தான் கொடுக்க வேண்டியதில்லை என்று சொல்லியே இவைகளைச் சொல்கிறார். (மதுரை விவாத சிடியில் இதைப் பார்க்கலாம்). அதையும் ஏற்றுக்கொள்ள பலர் இருக்கின்றனர். ஆதாரத்தின் அடிப்படையில் சொல்வதை உதாசீனப்படுத்துகின்றனர்.

சுருக்கமாக: கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு காலக்கெடு உண்டு. அதைப் போலவே கால இடைவெளியில் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றாலே கொடுத்த பொருளுக்கும் சேர்த்துதான் கொடுக்க வேண்டும். இதற்கான விளக்கத்தைத்தான் மேலே சில ஆதாரங்களுடன் பார்த்தோம்.

மேலதிக நடைமுறை உதாரணம்.

மேலதிகமாக சில நடைமுறை உதாரணங்களைக் கொண்டும் இவைகளைப் புரியலாம். ஒரு அரசாங்கம் கீழ் கண்ட ஒரு வரியை கட்டச்சொல்லி உத்தரவு இடுகிறது. அதாவது ஒரு இலட்சத்திற்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் அதில் இருந்து 2.5மூ வரியாகக் கட்ட வேண்டும். ஒரு இலட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. ஒருவர் பத்து இலட்சம் வைத்திருக்கின்றார். இந்த வருடம் 2.5மூ கட்டிவிட்டார். அடுத்த வருடம் 12 இலட்சம் இருக்கிறது. இப்போது 12 இலட்சத்துக்கு 2.5மூ கட்ட வேண்டுமா? அல்லது 2 இலட்சத்துக்கு 2.5மூ கட்ட வேண்டுமா? அந்த சட்டத்தின் படி 12 இலட்சத்திற்கு 2.5மூ கட்ட வேண்டும் என்றுதான் யாரும் கூறுவார்கள். அவர் இரண்டு இலட்சத்திற்கு மட்டும் வரி கட்டினால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

அவர் இரண்டு இலட்சத்திற்கு வரி கட்டினால் போதும் என்றால், அது சொல்லப்பட்டிருக்க வேண்டும். போன வருடம் கட்டிய பணத்திற்கு இந்த வருடம் கட்டத் தேவையில்லை என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் சொல்லப்படாவிட்டால் தானாகவே கையில் உள்ள அனைத்துக்கும் கட்ட வேண்டும் என்பது சொல்லாமலே புரியக்கூடியதாக இருக்கிறது. வரி கட்டிய பணத்திற்கே திரும்பத் திரும்ப கட்டு என்று சொல்லப்பட வேண்டியதில்லை, அப்படி யாரும் சொல்வதும் இல்லை, இதுதான் நடை முறை.

ஜகாத் விஷயத்திலும் அது தான் சட்டம்

ஜகாத் விஷயத்தில் மட்டும் வருடா வருடம் 2.5 சதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு வேறு அர்த்தமாம். வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று நிரூபித்தால் மட்டும் போதாது, கொடுத்ததற்கே திரும்பத் திரும்ப கொடு என்று நபி மொழி வேண்டும் என்று பி.ஜே. கேட்கின்றார். அதையே இலட்சக்கணக்கானோரின் உதடுகளும் திருப்பி சொல்கின்றன.

ஆக அவர் கேட்பது எல்லாம் 'இல்லாத ஊருக்கு வழிதான்'. நாம் திருப்பிக் கேட்கின்றோம் கொடுத்ததை விட்டுவிட்டு புதிதாய் வந்ததற்கு மட்டும் கொடு என்று சொல்லப்பட்டிருக்கின்றதா? அதற்கு தான் ஆதாரம் தர வேண்டும். இல்லை என்றால் கொடுத்ததற்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது தான் அர்த்தம். பி.ஜே. மாற்றி சொல்வதற்கு காரணம் அவர் போட்ட அடிப்படை தான். பொருளுக்கு தூய்மை என்று வைத்து அடித்தளம் போட்டாகிவிட்டது. இப்போது அடித்தளத்தை மாற்ற முடியாது என்று கட்டிடத்தை அடித்தளத்திற்கு தகுந்தாற் போல் கட்டப் பார்க்கிறார். கொடுத்த பொருள்தான் தூய்மையாகிவிட்டதல்லவா? அதற்கே திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டுமா? இதுதான் அவரின் பிரச்சினை.

ஆனால் பொருளுக்குத் தூய்மை ஜகாத் என்பது ஒரு வாதத்திற்கு தவறாகப் போனாலும் நான் சொன்னது சரி தான் என்று கூறிக்கொள்கிறார். அதை முக்கியமான ஆதராமாக வைக்கவில்லை என்கின்றார். அதையும் பலர் ஆமோதிக்கின்றனர்.

காலக்கெடு (இடைவெளி) என்ன?

காலஇடைவெளியில் தான் ஜகாத் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஜகாத் சட்டத்தில் காலஇடைவெளியும் ஒரு அம்சமாக இருக்கிறது. அதை விட்டுவிட்டு செயல்படுத்தவே முடியாது.

நாம், கால இடைவெளி ஒன்று நிச்சயமாக உண்டு என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்த பின் காலக்கெடு பற்றி அறிவிக்கின்ற ஏராளமான ஹதீஸ்களைப் பார்த்து அவைகளில் பலமான நபி மொழிகளை சுட்டிக்காட்டுகிறோம். மௌலவி பி.ஜே. அவர்களோ காலக்கெடு இருக்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என்கின்றார். அது மட்டுமல்ல அதனால் தான் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்ற முடிவை எடுத்தேன் என்கின்றார்.

ஆகவே வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சரியான நபி மொழி இருக்கின்றது என்று அவர் ஏற்றுக்கொண்டால், அவரது முடிவு தவறு என்று அவரே சொன்னதாக ஆகிவிடும், இந்த நிலையில் தான் அவர் இருந்து கொண்டிருக்கிறார்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு நபி மொழி உட்பட பல ஆதாரங்கள் தரப்படுகின்றன. சகோதரர் பி.ஜே. அவர்கள் இது பலகீனம், அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எல்லாவற்றையும் தட்டி விடுகின்றார்.

நாம் கேட்பது இதுதான், ஒரு காலக்கெடு இருக்கிறது என்று சரியான நபி மொழி சொல்லிக் கொண்டிருக்கிறது, என்பதை நிரூபித்த பின் அந்த காலக்கெடு ஒரு வருடம் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டு அதை ஏற்றுக்கொள்கிறோம்.

காலக்கெடு இருக்கின்றது என்பது உறுதிபடுத்தப்பட்ட ஒன்று. வருடா வருடம் கொடுக்க ஆதாரம் இல்லை என்றால், அந்த காலக்கெடு என்ன? என்று திருப்பிக் கேட்கின்றோம். ஆறு மாதமா? இரண்டு வருடமா? இரண்டு மாதமா? அதற்கு ஏதும் ஆதாரம் இருந்தால் கொண்டு வரட்டும். இல்லை என்றால் இந்த விஷயத்தில் வீண் குழப்பங்கள் செய்யாமல் இருக்கட்டும்.

திருக்குர்ஆனின் 6:141 வசனத்திற்கே, உண்மைக்கு மாற்றமான விளக்கம் கொடுக்கும் போது, சரியான நபி மொழிகளை ஏதேனும் காரணம் காட்டி தட்டி விடுவது அதைவிட இலகுவான காரியம்தான்.

வருடா வருடம் கொடுக்க வேண்டும்

வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பதற்கு பல நபி மொழிகள் இருக்கின்றன. இதில் பலமானதும், பலகீனமானதும் இருக்கின்றன. இவை அணைத்துமே வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதையே அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆறு மாதம் என்றோ, இரண்டு வருடம் என்றோ அறிவிக்கும் ஒரு நபி மொழி கூட இல்லை. நபித் தோழர்களின் செயல்பாடுகளும் கருத்து வேறுபாடில்லாமல் இதையே உறுதி செய்கின்றன.

ஸஹீஹ்கான நபி மொழியாக அபு-தாவூத்தில் வரக்கூடிய ஒரு நபி மொழியை அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்:

மூன்று விஷயங்களை செய்யும் ஒருவர் ஈமானின் ருசியை சுவைத்து விட்டார்

(1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை மட்டுமே வணங்குவது. (2) தனது செல்வத்திற்கான ஜகாத்தை ஒவ்வொரு வருடமும் மன விருப்பத்துடன் வழங்கி வருவது................ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காழிரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த நபி மொழியையும் பல காரணங்களைக் கூறி பலவீனம் என்று ஒதுக்குகிறார். எல்லாவற்றையும் எழுதினால் இன்னும் நீண்டு கொண்டே போகும் என்ற காரணத்தினால் ஒரு காரணத்தை மட்டும் விளங்குவோம்:

இதை அறிவிக்கக் கூடியவர் நபித் தோழர் இல்லை என்கின்றார். இதைக் கூறிவிட்டு அவரே சொல்கிறார், இருந்தாலும் சில நூற்களில் இவரை நபித் தோழர் என்று கூறி இருப்பது ஏன் என்று புரியவில்லை என்று.

அறிவிப்பாளர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்ட இவர் மேற்கோள் காட்டும் எல்லா நூல்களிலும் இவரை நபித் தோழர் என்றே கூறப்பட்டுள்ளது.

(01) தக்ரீப் - 226 (02) தஹ்தீபுத் தஹ்தீப் - 2ஃ670 (03) அல் இஸாபா – 2ஃ371 இந்த மூன்று நூல்களும் நபித் தோழருக்கான இலக்கணம் கூறிய இப்னு ஹஜர் அவர்களுக்குரியதாகும். (04) தாரிக்குல் கபீர் – 4ஃ345 இது இமாம் புஹாரிக்குரியது. (05) அல் இஹ்திஆப் - 3ஃ117 (06) அல் ஜரஹ் வத்தஃதீல் - 5ஃ185 (07) தஹ்தீபுல் கமால் - 5ஃ645. (08) ஃதிகாத் - 1ஃ365. (09) தபகாத்துல் குப்ரா – 7ஃ421. (10) உசுல் ஃகாபா – 3ஃ392. (11) அவ்னுல் மஃபூத் 2ஃ324. (12) அல் காஷpஃப் - 1ஃ599. (13) முஃஜமுஸ் ஸஹாபா – 2ஃ37. (14) மஃரிபத்துஸ் ஸஹாபா – 4ஃ178. (15) நைலுல் அவ்தார் – 4ஃ152. (16) தஜ்ரீத் அஸ்மாவுஸ் ஸஹாபா – 1ஃ335.


இவர் நபித் தோழர் இல்லை என்று உலகில் உள்ள எந்த ஒரு நூலிலும் கூறப்படவில்லை. ஹதீஸ் கலை அறிஞர்கள், அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் யாருமே இவரை நபித் தோழர் இல்லை என்று கூறவில்லை.

அது மட்டுமல்ல நபித் தோழர் என்பதில் சந்தேகம் இருக்கிறது என்று கூட கூறவில்லை. நாம் இத்தனை நூட்களின் பட்டியலைக் காட்டி அவர் நபித் தோழர் என்று நிரூபிக்கின்றோம். பி.ஜே. ஏதாவது ஒரு நூலில் இருந்தாவது, அவர் நபித் தோழர் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். இவராக ஒர காரணத்தைச் சொல்லி அதனால் அவர் நபித் தோழர் இல்லை என்கின்றார். இதைப் போன்று சில காரணங்களைச் சொல்லி அந்த நபி மொழியை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றார்.

ஹதீஸ் கலையின் பொது விதி

இந்த நேரத்தில் ஹதீஸ் கலையின் பொதுவான ஒரு விதியையும் இங்கே குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. மேற்கண்ட ஹதீஸை நாம் முன்பு பார்த்த (நபித் தோழர் இல்லை என்ற) காரணத்தைச் சொல்லி எந்த ஆதாரமும் இல்லாமல், அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னாலும், ஹதீஸ் கலையின் பொதுவான ஒரு விதி அந்த ஹதீஸ் சரிதான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு நபி மொழியை சரி இல்லை என்று சொல்வதற்கு எந்த ஹதீஸ் கலையின் விதியை பயன்படுத்துகிறோமோ, அதே ஹதீஸ் கலையின் பொது விதியைத் தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அந்த விதியாவது:
'அறிஞர் பெருமக்கள் அணைவரும் ஒரு ஹதீஸை செயல்படுத்தி வர வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தால் அந்த ஹதீஸை ஏற்று செயல்படுத்துவது கட்டாயக் கடமையாகும்' இக்கலையின் சிறந்த அறிஞர்கள் பலரும் இதனைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். (அந்நுகத் - 171)

'ஒரு நபி மொழியை மக்கள் அணைவரும் ஒப்புக்கொண்டுவிட்டால் அதற்கு சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லை என்றாலும் அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று தீர்மானிக்கப்படும்' (தத்ரீப் - 29)

இவ்வாறு ஒப்புக்கொள்ளப்படுவதற்கு கீழ்கண்ட நிபந்தனைகளும் உண்டு.

* அந்த நபி மொழியின் அறிவிப்பாளர் மீது பொய் உரைப்பவர், இட்டுக்கட்டுபவர், என்ற குற்றச்சாட்டு இருக்கக் கூடாது. ஆனால் நினைவாற்றல் குன்றியவர் என்ற குற்றச்சாட்டு இருக்கலாம்.

* மேலும் குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழியுடன் நேரடியாக மோதக்கூடியதாக இருக்கக் கூடாது.

* முக்கியமாக இக்கலையின் அறிஞர் பெருமக்கள் யாவரும் மறுக்காது அந்தக்கருத்தை செயல்படுத்தி வந்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனையின் படி ஒரு ஹதீஸ் இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ் கலையின் பொது விதியாகும்.

நாம் முன்பு பார்த்த அபு-தாவூத்தில் பதிவாகியுள்ள வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும், என்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதுதான். அதைப் பி.ஜே. அவர்கள் தான், ஏற்கப்படாத காரணங்களைக் கூறி சரியானது இல்லை என்கின்றார். அவர் சொல்கின்ற காரணங்களில் ஒன்றை ஏற்கனவே பார்த்தோம்.

அபு-தாவூத்தில் பதிவாகியுள்ள அதே ஹதீஸை வேறொரு அறிவிப்பாளராகிய அப்துல் ஹமீத் அபுத்தகி என்பவரும் அறிவிக்கிறார். இது தப்ரானி, முஃஜமுஸ் ஸஹாபா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது. இதுவும் ஹதீஸ் கலையின் விதியின் படி சரியான ஹதீஸ் ஆகும்.

இந்த அறிவிப்பாளர், பொய் உரைப்பவர், இட்டுக்கட்டுபவர் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவர்.

* இந்த ஹதீஸ் குர்ஆனுக்கோ நபி மொழிக்கோ எதிரானது அல்ல. மாறாக, மற்ற நபி மொழிகளோடும், நபித் தோழர்களின் நடவடிக்கையோடும் ஒத்துப் போகக்கூடியது.

* இந்த ஹதீஸ் நபித் தோழர்கள் காலத்தில் இருந்து இன்று வரை எல்லா அறிஞர்களாலும் ஏற்று செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்கண்ட மூன்று நிபந்தனைகள் தான் அந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானதுதான் என்று ஹதீஸ் கலையின் விதிப்படி நிரூபிக்கிறது. அது மட்டுமல்ல அபு-தாவூத்தில் அம்ர் பின் ஹாரிஸ் என்பவர் வழியாக பதிவாகியுள்ள இதே ஹதீஸையும் ஆதாரப்பூர்வமானது என்று ஊர்ஜீதப்படுத்துகிறது.

ஆதாரத்தின் அடிப்படையில்

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை எவ்வித சந்தேகங்களுக்கும் இடமில்லாமல், ஆதாரங்களுடன் கூறியுள்ளோம். அது மட்டுமல்ல வருடா வருடம் கொடுக்கும் போது, 'கொடுத்த பொருள்', 'கொடுக்காத பொருள்' என்றெல்லாம் சொல்ல முடியாது. கொடுத்த பொருள் செலவாகியிருக்கலாம். புதிய பொருள் வந்திருக்கலாம். அல்லது கொடுத்த பொருள் கையில் இருக்கவும் செய்யலாம். கையில் இருக்கின்ற மொத்த பொருட்களையும் கணக்கிட்டு 2.5 சதம் ஜகாத் கொடுக்க வேண்டும். இது தான் இஸ்லாமிய நடை முறை. உலகம் முழுவதும், எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படிப் பின் பற்றவில்லை, என்பதற்கான ஆதாரங்களையும் விளக்கங்களையும் தந்துள்ளோம். இதற்கு மாற்றமாக சொல்பவர்களிடம் தான் ஆதாரம் இல்லை. எந்த ஒரு சரியான ஆதாரத்தைக் காட்டினாலும், 'அந்த அறிஞர் தவறுக்கு அப்பாற்பட்டவர் இல்லை, அவர் தவறு செய்துவிட்டார்' என்று சொல்லி, இவர் தனது சொந்த விளக்கத்தை தான் ஆதாரமாக வைக்கின்றார். அவைகள்தான் தவறாக இருக்கின்றன. இவைகளை நாம் ஆதாரத்துடன், சுட்டிக்காட்டியுள்ளோம். ஆகவே அவர் சொல்வது இங்கு அவருக்கே பொருத்தமாக இருக்கிறது. இந்த ஜகாத் விஷயத்தில் பி.ஜே. தவறாக சொல்கின்றார். தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல பி.ஜே.

மார்க்கத்தில் சொல்லாத புதிய சட்டத்தின் பயங்கர விளைவுகள்

* பி.ஜே. சொல்வது மார்க்கத்தில் உள்ளதுதான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது புதிதாக தினிக்கப்பட்டது. ஆகவே பித்அத்தான விஷயம். பித்அத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றவர், இந்த விஷயத்தில் பித்அத்தை செய்யச்சொல்லி பிரச்சாரம் செய்கின்றார். பித்அத்தான விஷயம் ஒவ்வொன்றும் வழிகேடு, ஒவ்வொரு வழி கேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

* இவரது சட்டம், மக்களுக்கு கூடுதலான சுமை. செயல்படுத்தவே சாத்தியம் இல்லாத ஒரு சட்டம். ஜகாத் கடமையான ஒருவன், அவனுக்கு புதிதாய் வருகின்ற ஒவ்வொரு பொருளுக்கும், (ஒரு பைசாவாக இருந்தாலும்) உடனே ஜகாத் கொடுத்துவிட வேண்டும். கொடுக்காமல் செலவு செய்ய முடியாது. அப்படிச்செய்தால், அந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்காத குற்றவாளி. அந்த பொருட்கள் எல்லாம் உருக்கப்பட்டு மறுமையில் சூடு போடப்படுவான். உதாரணமாக ஒரு பத்து ரூபாய் பணம் வருகின்றது, உடனே அதற்கு ஜகாத் கொடுத்துவிட வேண்டும். அடுத்த நிமிடமே இன்னொரு ஐந்து ரூபாய் வந்தாலும் உடனே கொடுக்க வேண்டும். இப்படியாக வாழ்நாள் முழுவதும் வருகின்ற ஒவ்வொரு பைசாவுக்கும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

* அல்லாஹ் (ஸுப்) சொன்ன சட்டம் வெகு எளிமையானது. அதன்படி ஜகாத் கடமையான ஒருவன் இந்த வருடம் ஜகாத் கொடுக்கின்றான். பின்பு எவ்வளவு சம்பாதித்தாலும் அவைகளை எல்லாம் ஜகாத் கொடுக்காமலே செலவு செய்து கொள்ளலாம். செலவு போக மிச்சம் உள்ளதை சேமிக்கலாம். இவைகளுக்கெல்லாம் ஜகாத் இல்லை. அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும் நேரம் வரும் பொழுது, அவன் செலவு போக அதிகப்படியாக சேமித்து வைத்ததிலிருந்து 2.5 சதம் கொடுக்க வேண்டும். அதாவது அவன் ஜகாத் கொடுக்கின்ற நேரத்திலே, கையிலே எவ்வளவு உள்ளதோ அவைகளுக்கு 2.5 சதம் ஜகாத். இடையில் வருகின்ற பொருட்களை அவன் விரும்பியபடி செலவு செய்து கொள்ளலாம்.

* ஆனால் மார்க்கத்தில் இல்லாத, பி.ஜே. அவர்களின் சட்டத்தை செயல்படுத்தினால் அவன் குற்றவாளியாகிறான். அந்த சட்டம் சரியானது என்று வைத்துக் கொண்டாலும் குற்றவாளியாகிவிடுவான். ஏன் என்றால் ஜகாத் கடமையான ஒருவன் வாழ் நாள் முழுவதும் சம்பாதிக்கின்ற ஒவ்வொரு பைசாவுக்கும் ஜகாத் கொடுத்தே ஆக வேண்டும். இதை செயல் படுத்த முடியாமல் மறுபடியும் குற்றவாளியாகிறான். ஆக பி.ஜே.யின் சட்டத்தை செயல்படுத்தினால், எப்படியும் அவனக்கு அல்லாஹ்வின் தண்டனை உண்டு என்பதிலே எவ்வித சந்தேகமும் இல்லை.

* பி.ஜே. யின் கருத்துப்படி, ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத், ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் அப்படி ஒரு தடவை கொடுத்தே ஆக வேண்டும் என்பதை விளக்கமாகக் கண்டோம். ஆனால் பி.ஜே.யோ, ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத், ஆனால் கொடுத்ததிற்கே திரும்பத் திரும்ப கொடுக்கச் சொல்கின்றார்கள், என்று சொல்லி அவர் சொல்வது எளிமையாக இருப்பது போல் பிரச்சாரம் செய்கிறார். மாற்றுக் கருத்துப்படி ஜகாத் கொடுத்தால் பிச்சைக்காரனாகி விடுவார்கள் என்றெல்லாம் சொன்னார். ஆனால் இவர் சொல்கின்றபடி ஜகாத் கொடுத்தால்தான், ஒருவன் அதிகப்படியான பொருளை செலவிட வேண்டி வரும். ஏன் என்றால் புதிதாய் வரும் அனைத்து பொருட்களுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும.

* ஜகாத் கொடுத்த பொருளை அப்படியே வைத்துக் கொண்டு, அதற்கு திரும்பவும கொடுக்க வேண்டும் என்ற யாரும் சொல்லவில்லை. அடுத்த வருடம் திரும்பவும் கொடுக்கின்ற நேரம் வருகின்ற போது, இவர் செலவு எல்லாம் போக அந்த பொருள் கையில் மிச்சம் இருந்தால், அதில் இருந்து 2.5 சதம் கொடுக்க வேண்டும். அந்த பொருளை செலவு செய்து இருந்தால் அதற்கு ஜகாத் கிடையாது. இதை நடை முறை உதாரணத்துடன் முன்பே கண்டோம்.

முடிவுரை

இறுதியில் மறுபடியும் தமிழ் முஸ்லீம்களுக்கு நாம் வைக்கும் அன்பான வேண்டுகோள். எதையும் ஆதாரத்தை வைத்து முடிவெடுங்கள்.

ஜகாத் விஷயத்திலே பல நிலைபாடுகளிலே, பி.ஜே. இருந்து வருகிறார் என்பதை நாம் ஆதாரத்துடன் தந்துள்ளோம். சுருக்கமாக மறுபடியும் கீழே தரப்பட்டுள்ளது.

* முதலிலே சில ஆதாரங்களை கொடுத்தது.

* அது தவறானதும், அதே கருத்தில் வேறு ஹதீஸைத் தந்தது.

* பின்பு அதையும் விட்டுவிட்டு, வேறு ஆதாரம் இருக்கிறது என்றது.

* ஆதாரம் என்று சொல்லிவிட்டு 'கொடு' என்ற பொதுவான கட்டளையை காண்பித்தது.

* ஆதாரம் கொடுக்க அவசியம் இல்லை என்று தற்சமயம் சொல்வது.

மேற்கண்ட இந்த நிலைப்பாடுகளை ஒருவர் கவனித்தாலே, அவரது கருத்து சரியா? தவறா? என்பது தெளிவாக விளங்கும்.

இப்பொழுது, ஆதாரம் கொடுக்க மாட்டேன், ஆனால் நான் சொன்னதுதான் சரி என்று சொல்கின்றார். அதுவும் முக்கிய கடமையான ஜகாத் விஷயத்திலே.

விவாதம் என்று அழைத்து, ஆனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்றால், தாம் சொல்வது சரி என்று மக்களுக்கு காட்டும் நிகழ்ச்சிதான் நடைபெறுகிறது. இதற்கு ஆதாரமாக மதுரையிலே நடந்த விவாதத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி, ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். தான் கூறுவதுதான் சரி என்று காண்பிக்க, குர்ஆனின் வசனத்தையே (6:141) மறுக்கும் நிலைக்கு போய் விட்டார், சகோதரர் பி.ஜே.

இவ்வளவுக்கு பின்பும், விவாதத்தின் மூலம்தான் உண்மையை கண்டறிய முடியும் என்று ஒருவர் நினைத்தால், அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்யட்டும். நாம் தயாராக இருக்கின்றோம். ஏற்கனவே அவரோடு இருக்கின்ற மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி உடன், சிறிய அளவிலே ஒரு விவாதம் நடத்தி உள்ளோம். நாம் பின் வாங்க மாட்டோம் என்று இதன் மூலம் மறுபடியும் உறுதி கூறுகின்றோம்.

அடுத்தது இதைவிட, பொதுவாக யாருக்கும் விளங்கக்கூடிய ஒரு முக்கியமான விஷயத்தை பார்க்க இருக்கின்றோம் இன்ஷh அல்லாஹ்.

குர்ஆனோடு, பலமான நபி மொழி மோதுமா? என்பதுதான் அது. ஜகாத் விஷயத்தைவிட அது இன்னும் எளிதாக மக்களுக்கு புரியும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

1 comment:

சையது said...

ngUik mbg;gjd; %yk;……….!
ehk; ekJ nfsutk; ghjpf;f;$lhJ vd;gjw;fhf ngha; nrhy;gtHfshf ,Uf;fpd;Nwhk;. ngha; nrhy;tJ khHf;fj;jpNy jilnra;ag;gl;lJ> xU rpy re;gHg;gq;fisj;jtpu. Mdhy; $rhky; rpd;d tp~aq;fSf;F$l ngha; NgRfpNwhk;. ngha; nrhy;ypahtJ ehd; nrhd;dJjhd; rhp vd;W fhl;b> kf;fsplj;jpNy nfsutj;ij epiyehl;l Kay;fpNwhk;. ,g;gbahf ehk; gy topfspYk; jw;ngUikabf;fpNwhk;.
vdf;F ,t;tsT nrhj;J ,Uf;fpwJ vd;W nrhy;yp ngUikabf;fpNwhk;. ek;ksT nry;tk; ,y;yhJ> tWikapy; ,Ug;gtHfs;> ek; neUq;fpa nrhe;jq;fshf ,Ue;jhYk;> mtHfis kjpj;J mtHfNshL ehk; njhlHG itj;Jf;nfhs;tjpy;iy. ek;ikg;Nghy;> my;yJ mijtpl me;j];jpy; caHe;jtHfisj; Njb> mtHfNshL cwT itj;Jf;nfhs;fpNwhk;. ,ijj;jhd; ngUikahf epidf;fpNwhk;.
ngUik my;yh`;Tf;FhpaJ. mtdJ mbikfshfpa ehk; ngUikg;gl vd;d jFjp ,Uf;fpwJ? Mdhy; ehk; ekJ mbikj;jdj;ij kwe;J> ekJ v[khdid kwe;J> ek;khy;jhd; vy;yhk; ele;jJ vd;W epidf;fpNwhk;. ek; Gj;jpapdhy;jhd; ngaUk;> GfOk;> nry;tKk; fpilj;Jf;nfhz;L ,Uf;fpwJ vd;W fzf;F Nghl;L fz Neuj;jpy; ‘ug;Gy; MykPd;’ I kwe;J jw;ngUik nfhs;fpNwhk;. ,jdhy; kWik tho;f;ifia kwe;J> ,e;j cyf ,d;gj;jpYk;> GfopYk; Mo;e;J> ,e;j cyf tho;f;ifia NjHe;njLj;Jf; nfhz;ltHfshf Mfptpl;Nlhk;.
Vd; vd;why; ngUik vdf;FhpaJ vd;W my;yh`; (]{g;) jdJ jpUkiw topahf ekf;F czHj;Jfpwhd;. ngUikabg;gtHfs; NeHtop ngwkhl;lhHfs;. (my;-FHMd; 7:146> 28:39> 40:35> 41:15> 63:5)
ngUikabg;NghUf;F eufk; vd;Wk; fPo;fz;l trdq;fspd; %yk; ekf;F vr;rhpf;if tpLf;fpd;whd;. (my;-FHMd; 16:29> 22:09> 39:72> 40:75-76> 46:20)
ngUikabf;fhjtUf;Nf nrhHf;fk; vd;Wk; ed;khuhak; $Wfpd;whd;. (my;-FHMd; 28:83)
Ms; gyj;jhYk;> gz trjpahYk; ngUikg;gl ekf;Fj; jFjpapy;iy vd;gij fPo;f;fz;l trdq;fspy; czHj;Jfpd;whd;. (my;-FHMd; 9:25> 18:34> 2:247> 11:10> 15:88> 18:34> 20:131> 23:55> 104:03)

NkYk; ngUikabg;gjhdJ ghtj;jpd;ghy; ,l;Lr;nry;Yk; vd;Wk; vr;rhpf;fpd;whd;. my;-FHMd; 2:206)
i~j;jhdpd; Fzq;fspy; ngUikabg;gJ xU Fzk; vd;W i~j;jhdpd; Fzj;NjhL xg;gpLfpd;whd;. (my;-FHMd; 2:34> 7:12-13> 15:31> 38:74)
ngUikabg;Nghiu my;yh`; (]{g;) ‘ehd; tpUk;gkhl;Nld;’ vd;W NkYk; ,UgJ trdq;fs; %ykhf $Wfpd;whd;. ,d;Dk; ngUik vd;w Fzk; $lhJ vd;W NtW ,Ugj;njhU trdq;fspd; %yk; njspTgLj;Jfpwhd;.
Mdhy; ehk; xt;nthU tp~aj;jpYk; ngUikabg;gtHfshf ,Uf;fpd;Nwhk;. ekJ gjtpiaAk;> gbg;igAk; itj;J ngUikabf;fpNwhk;. ‘,e;jg;gbg;ig czf;F mspj;NjNd! me;jg;gjtpia cdf;F mspj;NjNd! mjd; %yk; vd;d nra;jha;?’ vd;w Nfs;tpfSf;F gjpy; nrhy;ypahf Ntz;Lk; vd;gij kwe;jtHfshf ,Uf;fpd;Nwhk;. ekJ nghUl;nry;tk;> kf;fs;nry;tk;> Mfpatw;iw itj;J ngUikabf;fpNwhk;.
ngUikabg;gJ vd;gJ thahy; ngUikabg;gJ kl;Lky;y. mijtpl Kf;fpaj;Jtk; tha;e;jJ eltbf;if. ehk; Jtf;fj;jpy; Fwpg;gpl;lJNghy;> gzk;> Gfo; Mfpatw;wpy; ek;iktplf; Fiwe;jtHfis Nftykhf epidg;gJ ngUikabg;gjhFk;. ,e;j me;j];ij ehd; ngw;wpUf;fpNwd;> mtdplk; ,J ,y;iy vd;W fHtk; nfhz;L> mtHfsplk; Ntw;Wik ghuhl;LtJ. ,itfis vy;yhk; my;yh`; (]{g;) ekf;F mspj;J ek;ik Nrhjpf;fpwhd; vd;gij kwe;J tpl;Nlhk; vd;gJjhd; cz;ik.
‘ngUikabg;gjd; %yk;> ePq;fs; eufpw;F> tpwFfshf MtPHfs;’ vd;W my;yh`; (]{g;) fLikahf vr;rhpj;jpUf;f> mij Jr;rkhf epidj;J> ,y;iynadpy; mij kwe;jtHfshf ehk;> fHtj;JlDk;> Mztj;JlDk; elg;gJ vjw;F? ,e;j cyfpd; tul;L nfsutk;> me;j];j;J> kw;Wk; mw;g ,d;gq;fSf;F kWikiatpl Kf;fpaj;Jtk; nfhLg;gjhy;jhd;. ehk; ,e;j cyif Njh;e;njLj;Jf;nfhz;ljhy;jhd;!
,d;~h my;yh`; njhlUk;…….